பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

தமிழர் வரலாறு

ஊடிழையாகவும், நார், பாவு இழையாகவும், கொண்ட ஆடைகளை நெய்தனர். இந்தியப்பஞ்சு, எகிப்தில், பல்வேறு புனிதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. பல்வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல்கள் பனோபிலிஸில் உள்ள (Panoplis) மெம்பிஸ் (Memphis) அருகே காணப்பட்டன. அந்நூல்களில் ஒருசில, அவற்றின் வடிவமைப்பில், இந்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. (Warmington Page 212)

இலவங்கம், எகிப்திற்காக என்றே, சிறப்பாக ஒதுக்கப்பட்டது போலவே, மிளகு, பாபிலோனியா, பாரசீக வளைகுடா, வாணிகங்களில், வழக்கத்திற்கு மேலான தேவைப்படுபொருளாக இருந்தது. அதனுடைய விறுவிறுப்பான பெருந்தேவை, “தாரியஸ்” (Dariws) ஆட்சியின்கீழ், பாரசீகப் பேரரசு விரிவடைந்தபோது ஏற்பட்டது எனக் கருதுவதற்குக் காரணம் உளது. இந்த வாணிகம், தென் இந்தியக் கப்பல்களில், கடல் வழியாக நடைபெற்றது. நில வழியாக அன்று, எதோப்பியரின் (Aethopians) மேனி நிறத்தைப் பெரிதும் ஒத்த நிறம் வாய்ந்தவர் ; தெற்கில், பாரசீகத்திலிருந்து வெகுதொலைவுக்கு அப்பால் குடிவாழ்பவர்; தாரியஸுக்கு என்றும் பணியாதவர் என்ற அளவிலேயே ஹெரோடட்டஸ், (Herodotas) திராவிடர்களைப் பற்றி அறிந்துள்ளார். (Scoff's Periplus. Page 213) பார்த்தியா (Parthia) வின் குறுக்காக நடைபெற்ற நில வாணிகமும், தாலமிகளால் ஊக்கம் ஊட்டப்பட்ட கடல் வாணிகமும், அறுதியிட்டுக் கூறமாட்டா. ஆண்டாண்டு காலமாக, ஏற்கெனவே, நடைபெற்றுவந்த இலவங்கம், மற்றும் மணப் பொருள்களின் வாணிகத்தின், பெருமளவிலான பெருக்கிற்கு வழிசெய்து விட்டன. உரோமுக்குத் தேவைப்படும் மிளகை, இக்கால கட்டத்தில், பொயினீஷியர்களும், கார்த்திகினியர்களும் வழங்கிவந்தனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்தியல் முறைகளைக் கையாண்டவருமான ‘இப்பொகிராட்ஸ்’ (Hippocrates) என்பார், மிளகை, “இந்திய நிவாரணி” (Indian remedy) என அழைக்கிறார். (Warmington, Page 182) அது, குளிர் காய்ச்சலுக்கும், வெப்பக்