பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு ... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

303

மாயோன் என்ற பெயரால், முல்லைநிலக் கடவுளாவன் கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக்கொடியாகவும், கொண்ட, வெண்ணிறக்கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப்படும் பின்னவன் தொடக்கத்தில் உழவுத்தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன். முன்னவன் கருப்பு வண்ணமும், பின்னவன், வெள்ளை வண்ணமும், தமிழ்ப் புலவர்களின் விருப்பத்திற்குரிய அணி நலங்களாம். "கடலில் வளரும் வலம்புரிச் சங்கை ஒக்கும் நிறம் வாய்ந்த, கொலை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையும் உடையவன்" என்றும், "மாசு போகக் கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் நிறம் வாய்ந்த, வானுற உயர்ந்த கருடக்கொடி உடைய, என்றும் வெற்றியே விரும்புவோன்" என்றும், அவர்கள், முறையே பாராட்டப் பெற்றுள்ளனர்.

‘’கடல்வளர் புரிவளை புரையும் மேனி,
அடல்வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,
விண்உயர் புட்கொடி விறல்வெய்யோனும்.‘’
-- புறநானுாறு : 56 : 3 - 6

"பால் போலும் வெண்ணிறம் வாய்ந்தவன் : பனைக்கொடியுடையான்" என்றும், "நீலமணியின் நிறம் வாய்ந்த திருமேனியுடையான்; ஆழிப்படையுடையான்" என்றும், அவர்கள் மேலும் பாராட்டப் பெற்றுள்ளனர்;

‘’பால் நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல் நிற உருவின் நேமி யோனும்‘’
--புறநானூறு : 58 : 14 - 15

இவ்விருவர்களின் மேனி நிறங்களுக்கிடையிலான மாறுபாடு, உவமை அணிகளாகப் பரவலாக ஆளப்பட்டுளது: எடுத்துக்காட்டுக்கு : "மாயோன் அன்ன 'மால்வரைக்