பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

தமிழர் வரலாறு

கவாஅன்; வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி." (நற்றிணை : 32 : 1 - 2) இராமாவதாரம் தவிர்த்து , திருமாலின் அவதாரங்களில், வேறு எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிப்பிடப்படவில்லையாதலின், இவ்விரு. வரும், தென் இந்தியாவில், திருமாலின் அவதாரங்களாக அறிமுகம் ஆனவரல்லர்). பலதேவன், எப்போதும் பனஞ்சாறு, பருகி வெறிகொண்டு கிடப்பன். பனை மலிந்த பகுதியில், அவன் வளர்ச்சிக்கு அது பொருந்தும், பனை, கங்கை வெளியில் வளர்வதில்லையாகவே, பலதேவ வழிபாடு கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலையில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலேயே அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.

பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வட நாட்டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

"வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்".
- சிலப்பதிகாரம் : 5 , 71 . 72.
"புகார் வெள்ளை நாகர்தம் கோட்டம்‘’
-சிலப்பதிகாரம் : 9 : 10,

பலதேவன் திருமாலின் படுக்கையாம் அரவின், மறுஅவதாரம் என்ப. அவ்வரவு நாகர்களைத் தம்மோடு இரண்டறக் கொண்டு நாகராகி விடவே, அதுவும் திருமால் வழிபாட்டு: நெறியில் இடம் பெற்றுவிட்டது. இவை புகார் நகரத்துக் கோயில்கள், மதுரையில், "மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்." (சிலப்பதிகாரம் : 14 : 9) இவ்வெடுத்துக்காட்டுக்கள் எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்தது என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில், .