பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தமிழர் வரலாறு

என்பதாம். இவை, விகுதிகள் இணைவால், சொற்களின் இயலும் உருவமும் வேறுபடும் மொழிகளின் அடையாளங்களாம். தமிழ், இதற்கு மாறாகத் , தனி இருசொற்கள் இணைந்தே தொகைச் சொற்களை உருவாக்கவல்ல ஒரு சொல்லியல் முறையினைக்கொண்ட ஒரு மொழியாம். தமிழில், பொருள் வேறுபடுத்தும் சொல்லுறுப்புகளாக வருவன 1. அம். மொழியில், தமக்கெனத் தனிப்பொருளும், தனி ஆட்சியும். உடையவாய, ஏழாம் வேற்றுமை உருபுகள் என வழங்கப்படும், ஒடு, பொருட்டு, அது. உடைய, இடை, தலை, திசை எனும் இவையும், இவை போல்வனவும். தமிழிலக்கண ஆசிரியர்கள் இவற்றைச் சொல்லீறுகள் - சொல்லுருபுகள் எனப் பொருத்தமுற அழைப்பர். 2. சிறிதே உருபு திரிந்த, ஒடு, இல், அது, ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபாம், அவை என்ற பன்மைச் சுட்டின் திரிபு வடிவாம் அ என்பன. எந்தச் சொற்களின் திரிபு வடிவம் என்பதை உணரலாகா வகையில் திரிந்திருக்கும், வேற்றுமை உருபுகள், ஐ, கு, என்ற இரண்டும் பெயர்ச்சொல், எழுவாய், விளி அல்லாத வேற்றுமைகளில் பன்மை வடிவு பெறும் சமஸ்கிருத முறைக்கு முற்றிலும் மாறாகத் தமிழில், பெயர்ச் சொல்லுக்கும், இவ்வேற்றுமை உருபுகளுக்கும் இடையில், பன்மை குறிக்கும் குறியீடுகள், "அவர்களுக்கு‘’ என்பதுபோல் நுழைக்கப்படும் உண்மை நிகழ்ச்சியால் தம் மூலச்சொல் அறியாவாறு திரிந்துவிட்ட ஐ, கு என்ற இவ்வுருபுகளும் ஒரளவு தனித்தன்மை வாய்ந்தனவே என்பது உணரப்படும்.


தமிழும், சமஸ்கிருதமும், இவ்வாறு அமைப்பு நிலையில், முழுக்க முழுக்க முரண்பட்டிருப்பதால், சமஸ்கிருத இலக்கண முடிவுகள், தமிழிலக்கணத்திற்குச் சரியாகப் பொருந்திவாரா; ஆனால், அகத்தியனார், சமஸ்கிருத மொழிக் கூற்றுண்மைகள், தமிழிலும் இடம் பெற்றுள்ள எனக் கருதுகிறார். அதனால், சமஸ்கிருதத்தில் உள்ளதுபோல், தமிழிலும் ஏழு வேற்றுமைகள் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்: வேற்றுமை உருபேற்ற சமஸ்கிருதப் பெயர்ச் சொற்களைத் தமிழ்ச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்கிறார் அச்