பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள்.....முதல் நுழைவு

317

ஆறாவது நூற்றாண்டுவரை விடாமல் கடைப்பிடிக்கப்பட்டு: வந்துள்ளன.

அகத்தியர் காலம் :

அகத்தியனார், அவர் மாணவர் தொல்காப்பியனார். ஆகியோரின் காலம் எது? அகத்தியனார் இலக்கணம், இப்போது இல்லை. ஆனால், தொல்காப்பியனார், அவரை அடிக்கடி எடுத்து ஆளுகிறார். அவர் சூத்திரங்களில் எங்கெல்லாம், என்று கூறுவர் எனப் பொருள்படும் "என்ப" என்ற சொல் இடப்பெறுகிறதோ, அங்கெல்லாம் உரையாசிரியர்கள் "என்று கூறுவர் ஆசிரியர்" என்றே பொருள் கூறுகின்றனர். தொல்காப்பியர், தம்முடைய இலக்கணத்தை "எழுத்து என்று சொல்லப்படுபவை யாவை என்றால், அவை, அ என்ற எழுத்தில் தொடங்கி, ன் என்ற எழுத்தில் முடியும் முப்பது என்று ஆசிரியர் கூறுவர்" என்ற கூற்றோடு தொடங்குகிறார்.

"எழுத்து எனப்படுப,
அகரம் முதல் ,
னகர இறுவாய் முப்பஃது என்ப".
(தொல் : எழுத்து : 1).

ஆகவே, அகத்தியனார் தம்முடைய இலக்கணத்தைத் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்ற எண்ணிலேயே தொடங்கினார் என, நாம் கொள்ளலாம். எழுத்து என்ற சொல், தமிழ் இலக்கண ஆசிரியர்களால், குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நிலையில் ஆளப்பட்டுளது. ஒலியையும், உருவத்தையும் ஒருசேரக் குறிக்கும் வகையில், அது பெயரிடப்பட்டுளது. முன்னது ஒலிவடிவில் உள்ள எழுத்து எனப் பொருள்படும். "ஒலிவடிவு. எழுத்து" என்றும், பின்னது நேர்க்கோடுகளாகவும் வளைந்த கோடுகளாகவும் வரையப்பட்ட எழுத்து எனப் பொருள்படும், "வரிவடிவு எழுத்து" என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில், ஒலிவடிவெழுத்து, வரிவடிவெழுத்து என்ற இரண்டையும், ஒருசேரக் குறிக்கும், இயல்புடைய சொல் எதுவும்