பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தமிழர் வரலாறு

பொருளில், “ஒரை” என்ற சொல்லைத், தொல்காப்பியர் ஆண்டுள்ளார்.

“மறைந்த ஒழுக்கத்து, ஒரையும் நாளும்,
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை”
[-தொல்: பொருள் களவு : 44]


“தீய ஒரையிலும், தீய நாளிலும், புணர்ச்சியைக் கைவிட வேண்டும் என்ற கொள்கை, மறைந்த ஒழுக்கமாம், களவுக் காலத்தில் தலைவனுக்கு இல்லை”

“ஒரை” என்ற அத்தமிழ்ச் சொல், “அவர்” (Hour) என்ற ஆங்கிலச்சொல்லைப் போலவே, முடிந்த முடிவாக, ஹொரா (Hora) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்தே பெறப்பட்டதாம். “ஹெரா” என்ற அச்சொல், கிரேக்க மொழியில், கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில், “பருவம்” என்ற பொதுப் பொருளில்தான் வழங்கப்பட்டது. நாளின் இருபத்து நான்கு கூறுகளில், ஒவ்வொரு கூறும், ஏழு கோள்களில், ஒவ்வொரு கோளின் ஆட்சிக் கீழ், வருவதாகக் கொள்ளப்பட்ட, கி. மு. இரண்டாவது நூற்றாண்டில்தான். “ஹொரா” என்ற அச்சொல்லுக்கு, நாளின் இருபத்து நான்கு கூற்றில், ஒரு கூற்றை உணர்த்தும் பொருள் தரப்பட்டுள்ளது. “ஹொரா” என்ற அச்சொல், தான் உணர்த்தும் சோதிடப் பொருட்குறிப்போடு, கி. மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால், ஆட்சி செய்யப்பட்டு வந்த காந்தாரத்திற்குப் பயணம் செய்தது, சமஸ்கிருத நூலாசிரியர்கள், கிரேக்கர்களின் ஜோதிடக் கலையைக் கற்றுக் கொண்டபோது, அது, சமஸ்கிருதத்தில் இடம் கொண்டது. பின்னர், அது, தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்து விட்டது. “ஒரை” என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பாகும். கி. பி. முதலாண்டிற்கு முனனர்த், தமிழில் இடம்பெற்றிருக்க முடியாது என்று கொண்டால், அது, ஒரு நடுநிலை மதிப்பீடாம். தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலில், “ஒரை” என்ற சொல்லை ஆண்டிருந்