பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : XVI

மூன்று தமிழ்ச் சங்கங்கள்


“சங்கச் செய்யுள்” என்ற சொற்றொடர் :

பாண்டி நாடு, மூன்று ஊழிக் காலங்களில், வெவ்வேறுபட்ட மூன்று தலைநகர்களைக் கொண்டிருந்தது என்றும், புலவர்களின் பேரவை நடைபெற்று வந்தது என்றும், பாடப் பெறும் ஒவ்வொரு புதுச் செய்யுளையும், ஆய்வு செய்யும் இலக்கிய ஆய்வகங்களாக இருந்து, சிலவற்றை, முறையாயின என ஏற்று, ஏனையவற்றைத் தகுதியிலாதன என மறுக்கும், ஒழுங்குற அவைகளாம். இச்சங்கங்கள் எனவும் பரவலாக நம்பப்பட்டது. சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்கள், இந்த நம்பிக்கையின் கீழ்ச்செயல்பட்டு, சங்கத்தின் முறையான ஒப்புதல்பெற்ற பாடல் என்னும் பொருள் உடையதான சங்கச் செய்யுள் “சங்கப்பாடல்” என்ற தொடரை, வழக்கில் நுழைத்தனர். தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இவ்விரு நூல்களைத் தவிர்த்துச் சங்கச் செய்யுள்கள் எனக் கூறப்படும், இரண்டாயிரத்திற்கும், அதற்கு மேற்பட்டும் உள்ள செய்யுள்களில் எந்தச் செய்யுளும், அச்சங்கத்தின் அல்லது ஆன்றோர் நிறைந்த அவைக்கு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டது அல்லது அனுப்புவதற்காக் எழுதப்பட்டது, அல்லது ஏதேனும் ஓர் அவையைச் சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது என்று கூறும் ஒரு பழங்கதை கூட, எழுத்து வடிவிலோ, அல்லது எழுதப்படா வாய்மொழி வழக்கிலோ இடம்பெறவில்லை. ஆகவே, சங்கச் செய்யுள் என்ற அத்தொடர் ஒரு பொருளற்ற தொடர் ஆகும். தாம் கூறும் பொருள்நிலையாலும், தம் காவியத் தலைவர்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்களாலும், தாம் விளக்கும் நாகரீகத்தின் தரத்தாலும், எட்டுத் தொகையாம் அப்பழம் பாடல்களிலும், தாம் மிகவும்