பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

335


இறையனார் என்ற சொல், கடவுள் என்றும் பொருள் படுமாதலின், உரையாசிரியரால், இந் நூலின் ஆசிரியராம் உரிமை, சிவனுக்குக் கற்பிக்கப்பட்டு, இந்நூலை எப்பொழுது, எந்த முறையில், சிவபெருமான் ஆக்கி அளித்தார் என்பதை. விளக்க விரிவான ஒரு கதையும் கற்பிக்கப்பட்டது. கடைச் சங்கம் முடிவுறும் நிலையில், பாண்டி நாட்டில் கடுமையான வறட்சி இடங்கொண்டது. பாண்டியன், தன் அவைப் புலவர்களைப் பேணிக்காப்பது இயலாது என அறிந்து அவர்களை வெளிநாடு போக்கினான். வறட்சி நீங்கிய பின்னர், அரசன், புலவர்களைத் தேடிக் கொணர்ந்து தன் அவைக்கண்சேர்த்தான். ஆனால், வந்த புலவர்களில் எவரும், பொருளதிகாரம் பற்றி எதுவும் அறியாதிருப்பது கண்டு வியந்து நின்றான். கடைச்சங்க காலத்துப் புலவர்களைப் போலவே, அதற்கு முந்திய சங்கத்துப் புலவர்களையும், இந்த ஆசிரியர் கூற்றுப்படியே, வழி நடத்திச் சென்ற ஏற்புடைய இலக்கண நூலாம், தொல்காப்பியத்தை எல்லாப் புலவர்களும் கற்றிருக்க வேண்டுமாதலின், அவர்களில் எவரும் அது. அறியாது போனது எவ்வாறு இயலும் என்பதை அந்த உரையாசிரியர் கூறவில்லை. உரையாசிரியர்கள் கூற்றில் உள்ள குறைபாடு இது ஒன்று மட்டுமன்று. உரையாசிரியர், மேலும் பல சொல்லிச் செல்கிறார். எழுத்தும், சொல்லும், யாப்பும் க ற் ப து, பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லவோ! அப்பொருளதிகாரம் கிடைக்காத போது, இவை: பெற்றுப் பயனில்லையே என அரசன் பெரிதும் கவலை கொண்டான், உடனே ஆலவாய் அண்ணல் அரசன் மனக் கவலையைத் தீர்ப்பான் வேண்டி, இந்நூலைச் செய்து, அதை மூன்று செப்பேடுகளில் எழுதித் தன் பீடத்தின் கீழ் இட்டு வைத்தான். (அகப்பொருள் ஆசிரியர், இறையனார் என்ற ஒருவராவர் என்ற உண்மையை விளக்கவே, மேலே கூறிய வகையில், கடவுளோடு தொடர்பு படுத்தும், இயற்கையொடு பொருந்தா இந்நிகழ்ச்சி கற்பனை செய்யப் பட்டது. இறையனார் என்ற இவர், ஒரு பழம்பெரும் புலவர். இவர் பாடல் ஒன்று, குறுந்தொகையில் இரண்டா