பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தமிழர் வரலாறு

வதாக இடம் பெற்றுளது, ஆனால், கடவுள் எனும் பொருள் படும், இறையனார் என்ற சொல், சிவனைக் குறிக்கவும் வழங்கப்படுமாதலின், இந்நூலின் சிறப்பைப் பெரிதுபடுத்த, இந்நூல் இறைவனுடையதாகக் கூறப்பட்டுளது. ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரின் பெரிய கடவுள் எனும் பொருளில்,மதுரைப்பேராலவாயர் என்றும்.இறையனார் அழைக்கப்படுவர். இப்பேராலவாயர், புறநானுறு 247, 262, அகநானூறு : 87, 297, நற்றிணை : 5, 362 பாக்களின் ஆசிரியராவர், இப்பாக்கள் அனைத்தும் ஒரே புலவரால் பாடப்பட்டிருப்பதாலும், அ ப் பு ல வ ரி ன் பெயரும், மதுராபுரித் தெய்வத்தின் பெயரும் ஒன்றாக இருப்பதாலும், அப்பாக்களில் சில, மதுராபுரித் தெய்வத்தின் பாக்களாகக் கொள்ளப்பட்டன.] மறுநாள், கோயில் குருக்கள், பீடம், நெடுநாட்களாகத் துய்மை செய்யப்படாமல் இருப்பது நினைவுக்கு வரவே, அது செய்வான் வேண்டி, பீடத்தைத் துக்கியதும் இச்செப்புத் தகடுகள் இருப்பது கண்டு, அவற்றைக் கொண்டு சென்று அரசன் பால் ஒப்படைத்தார், [இது போலும் கட்டுக்கதை, பத்தாம் நூற்றாண்டில், எங்கும் பரவலாகக் கூறப்பட்டது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசுகுப்தா என்பவரால் இயற்றப்பட்ட சிவ சூத்திரம் என்ற காஷ்மீர சைவ நூல், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கெஸமராஜா என்ற உரையாசிரியரால், சிவன்படைப்பு எனக் கூறப்பட்டுளது. சிவன், அச் சூத்திரங்களை இயற்றி. இமயமலையில் உள்ள பாறை மீது செதுக்கி வைத்து, வசுகுப்தன் கனவில் தோன்றி, அந்நூலைத் தேடிக்கண்டுபிடித்து, அவற்றை உலகிற்கு உணர்த்துமாறு பணித்தார் என்ற கட்டுக்கதையையும், அந்த உரையாசிரியர் கட்டிவிட்டார். நான் மொழிபெயர்த்து. இந்தியச் சிந்தனைகள்’ என்ற வெளியீட்டில் வெளியிட்டிருக்கும். சிவ சூத்ர விமர்ஸ்னி' என்ற நூலுக்குக் கெஸமராஜா அளித்திருக்கும் முன்னுரை காண்க.] அரசன் புலவர்களை அழைத்துத், தெய்வ அருளால் கிடைத்த அச்சூத்திரங்களின் பொருளை விரித்துரைக்குமாறு கேட்டான். தாம் நாற்பத்