பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

தமிழர் வரலாறு


மேலே கூறியதிலிருந்து, நமக்குக் கிடைத்திருக்கும். அகப்பொருள் உரை, நக்கீரருக்குப் பிற்பட்டவராய ஒருவர். கையால் எழுதப்பட்டது என்பது உறுதியாகிறது. நக்கீரரிடமிருந்து, அது ஏதேனும் கொண்டிருக்கிறதா என்பது பெரிய ஐயப்பாட்டிற்கு உரித்து. இதுகுறித்து, திரு. மு. ராகவ அய்யங்கார் அவர்கள், தொல் பொருள், மரபியல் 94 ஆம் சூத்திரத்திற்கான சேனாவரையர் உரையில் (சேனாவரையர் உரை அன்று. பேராசிரியர் உரை) பிற்காலத்தினராய. அவ்வுரை ஆசிரியர், அகப்பொருளுக்கு நக்கீரர் உரை கண்டார்ச் என்றும், முற்றம் துறந்த முனிவராகிய பிறிதொருவர், அது படிக்கும், அடுத்துவரும் தலைமுறையினர் நலனுக்காக உரைவிளக்கம் எழுதினார் என்றும் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். ( "கடைச் சங்கத்தாருள் களவியல் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர், இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு உரை எழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினாராதலும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராகலாம் பொய் கூறாராகவானும் என்பது) "தொ.பொ. மரபு : 94) ஆக, நமக்கு. இப்போது கிடைத்திருக்கும் உரை, பிற்கால உரையேயாகும். இப்பிற்கால உரை, தொல்காப்பியத்திற்கு உரைகண்டவர்களுள் முதல்வரும், அதனால், உரையாசிரியர் எனச் சிறப்பாக அழைக்கப்படுபவரும் ஆகிய இளம் பூரண அடிகளால் எழுதப் பட்டது என்ற நம்பிக்கைக்குத் துணை நிற்கிறார். அதற்கான சான்றுகளையும் திருவாளர் இராகவ அய்யங்கரர் கொடுத்துள்ளார். அவை ஓரளவு ஏற்புடைய என்றாலும், அவை போதுமானவை அல்ல. [செந்தமிழ் : 4 : 7 : பக்கம் 303-311].

அகப்பொருள் குறித்து எழுதப்படும் அனைத்து நூல்களும், மேற்கோளாகத் தவறாது காட்டப்படவேண்டியவாய, பழந்தமிழ்ப் புலவர்களின் பாக்களிலிருந்து மட்டுமல்லாமல் நான்கு வரிகளால் ஆன 329 பாக்களையும் மேற்கோள் காட்டுகிறது என்பதாலும், நமக்குக் கிடைத்திருக்கும் இறையனார் அகப்பொருள் உரை, நக்கீரர் உரையன்று :