பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 347

இரவலர்களுக்கும், அவர்தம் பெருஞ்சுற்றத்திற்கும், உணவும், மதுவும் வழங்குவதில் வரையறை வைப்பாரல்லர் என்பதைப் பழந்தமிழ்ப் பாடல்களிலிருந்து அறிகிறோம். எடுத்துக்காட்டுக்கு : "புன்செய் நிலத்தில் விளைந்த, புறா முட்டை போலும் வரகரிசியைப் பால் உலையில் இட்டு ஆக்கித், தேன் கலந்த சோற்றையும், பொரித்த முயற்கறியையும், காலை, மாலை இருபோதும், தம் சுற்றத்தோடு உண்ட நிகழ்ச்சியை, ஒரு புலவர் கூறுகிறார்.

" காலை அந்தியும், மாலை அந்தியும் புறவுக்கரு வன்ன புன்புல வரகின் பால்பெய் புன்கம் தேனொடு மயக்கிக் குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு".

            -புறம் : 34:8- 11

மற்றொரு புலவர், பாணர் பெருங்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருக்க, மதுவை முழுவதுமாக உண்டு தீர்க்குமாறு அப்பாணர் சுற்றத்தைப் போற்றிக் காத்த ஓர் அரசன் செயலைப் பாராட்டுகிறார்.

" துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி இரும்பாண் ஒக்கல், கடும்பு புரந்தது உம்"

            -புறம் : 224 : 2-3
 இவ்வாறு, பாணர் முதலாம் இரவலர்கள், தங்கள் உள்ளம் கிளர்ந்தெழும்போதெல்லாம், அரசர்களைப் பாராட்ட, பாக்கள் புனைந்தனர். பழைய தொகை நூல்களில் காணப்படும் பாக்களெல்லாம் அவ்வாறு பாடப்பட்டனவே. இப்பாடல்களில் எந்த ஒரு பாட்டும், எந்தக் கலைக்கழகத் தாலும் ஆராயப்படவில்லை. கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. -
அமைச்சர் முதலாம் ஐம்பெரும் குழுவினரோடும். பாணர்களோடும், அரசன், அரியணையில் கொலுவீற்றிருந்த