பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை 13 டுள்ளன என்ற உண்மைநிலையாலும், மேற்கூறிய முடிவு: அரண் செய்யப்படுகிறது. கூறிய இவ்வுண்மைகள் தமிழ், மொழியோடு உறவுடைய மொழிகளை வழங்கிவந்த மக்கள் ஒரு காலத்தில் இந்தியப் பெருநிலப்பரப்பு முழுதும் வாழ்ந்து வந்தனர் என்பதை உறுதி செய்யுமேயல்லது, அம்மக்கள், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்யா இந்தியப்பழங்குடிகள், இம்மண்ணின் மாந்தர் அல்லர் என்பதை நம்மை நம்பவைக்கத்தக்க அகச்சான்று ஒன்றுகூட இன்றுவரை தரப்படவில்லை. மேலும், தென்னிந்தியாவில், இதுவரை, அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைக் காலத்தைச் சார்ந்த கலைப் பொருட்களும், வரலாற்று நினைவுச்சின்னங்களும், தொடக்க நிலையாகிய பழங்கற்காலம் முதல் புத்தம் புது நிலையாகிய உலோக காலம்வரை எவ்வித இயற்கை நிலை பிறழ்வு காரணமாகவும், இடையற்றுப் போவதற்கு உள்ளாக்கப்படாத, நாகரீகத்தின் முறையான வளர்ச்சி, இந்நாட்டில் இருந்து வந்தது என்பதை நிலைநாட்டும் அழியாக் களஞ்சியத் தொகுப்பாய் அமைந்துள்ளன. (இக்கூற்றிற்கான அகச் சான்றுகளைச், சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'இந்தியாவின் கற்காலம்’-என்ற என் நூலில் காண்க.) இந். நாகரீகத்தின் வளர்ச்சிப் பருவ நிலை முழுவதும், தமிழ் மொழி, தென்னிந்தியாவில் வழக்காற்றில் இருந்து வந்துள்ளது , இந்நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும். மொழி வடிவில் உணர்த்தத்தேவைப்படும் சொற்கள், தமிழ், மொழியின் தொடக்கநிலை மொழியமைப்பிலேயே இடம். பெற்றுள்னன. அப் பண்டைக்கால பழக்க வழக்கங்கள், தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கிய ஏடுகளில், போற்றிக்காக்கப்படுவது நீண்டகாலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுளது. (இதற்கான எண்ணற்ற அகச் சான்றுகளுக்கு ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம்' என்ற என் நூலைக் காண்க) ஆகவே, தமிழர், தென்னிந்தியாவின்