பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

357


அறிவுரை வழங்கினான். அவர்களும் அவ்வாறே செய்தனர்: அவன் புகழ்கூறும் பாக்களை இயற்றினர். பின்னர் பாண்டியன் அவை சென்று அமர்ந்தனர். அரசன், அவர்களுக்குக் கோயில் வடமேற்குப் பகுதியில் குடிவாழ ஒரு பெரிய அரங்கை அமைத்து, எண்ணற்ற பரிசுகளையும் வழங்கினான்; இது, அரசவையில் ஏற்கெனவே இருந்து, அரசு ஆதரவு பெற்று வந்த புலவர்களுக்குப் பொறாமையை மூட்டிவிட்டது. புதிதாக வந்தவர்கள், வாதத்தில் முன் பிருந்த புலவர்களை வெற்றி கொண்டு, புலமைப் புகழ்விரும்புவோரின் புலமையைப் பரிசோதித்து அறிய, தாம் இருக்கத்தக்க பலகை ஒன்றைத் தருமாறு சிவனை இரந்து வேண்டினர். இரண்டு சாண் அளவுள்ள சதுரப்பலகையோடு, சிவன், புலவர் வடிவில் அவர் முன் தோன்றினான். பலகைக்கு நறுமணப் புகை காட்டி வழிபட்டு, நக்கீரர், முதற்கண் ஏறி அமர்ந்தார். பின்னர் கபிலர், பரணர் முதலானோர் ஒருவர் பின் ஒருவராக ஏறி அமர்ந்தனர். உண்மையான புலவர் ஒருவர்க்கு இடம் கிடைக்குமாறு, அப்பலகை , அளவில் வளர்ந்துகொண்டே இருந்தது. பின்னர், யார் பாட்டு, ஏனையோர் பாக்களிலும் உயர்வுடையது என்ற கருத்துவேறுபாடு புலவர்களிடையே எழுந்தது. சிவன் மீண்டும் அவர்கள் முன் தோன்றி, அவர் தம் கருத்துவேறுபாட்டைத் தீர்த்து வைத்தான். இக்கதை, வரலாற்றுக்குத் துணைபுரியாது. இந்தக் கதைகக்கும், இறையனார் அகப்பொருள் உரையில் காணலாம் கதைக்கும் இடையில் பொதுவாக இருக்கும் செய்தி, புலவர் நக்கீரனார் பெயர் ஒன்றே. இந்தக் கதை, ஒரே ஒரு சங்கம் இருப்பதையே கருத்தில் கொள்கிறது. மூன்று சங்கங்களை அன்று : இக்கதை, கற்பனை மலிந்த பழங்கதைகளால் முழுவதும் திணிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய எழுத்தாளர்கள், குழப்பம் இல்லாதனவாய பிற நூல் செய்திகளுக்குத் தருவதினும், அதிகமான நம்பிக்கையினை, இதற்கு அளித்துச் சங்கம் ஒன்று மட்டுமே இருந்தது போலக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சிவன் இந்த ஒரு சங்கத்தில்தான் பங்கு கொண்டான் ஆதலின், தங்கள் தெய்வ வழிபாட்டுணர்வின்