பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

கணக்காயர், இந்த உண்மையை ஐயமற உணர்த்தும் அகச் சான்றுகள் இதோ : "இருமூன்று' (முருகாற்றுப்படை , 176) "ஈரைம் பதின்மர் (புறம் : 2 : பெரும்பாணாற்றுப்படை: 415) மூவேழ்துறை (புறம்: 166) ஐயைந்து இரட்டி' (முருகாற்றுப்படை : 179) எண்ணான்கு"எண்ணான்கு இரட்டி' , ' எண்ணென் கலை' (சிலம்பு : நீர்ப்படை : 149, அழல்படு : 188, ஊர்காண் : 167) 'ஒன்பதிற்றிரட்டி' (முருகாற்றுப்படை : 168),

இவ்வாறு, எண்ணும் கலையில் விரிவான அறிவு பெற்றிருந்த பண்டைத் தமிழர், வாழ்நாளை, ஒரு பொழுது வாழ்வு, ஒரு நாள் வாழ்வு, ஒரு கிழமை வாழ்வு, ஒரு திங்கள் வாழ்வு, ஒரு ஆண்டு வாழ்வு எனக் கணக்கிடும் வாழ்நாள் கணிப்பு முறையினையும் அறிந்திருந்தனர். ஒரு நாளைப், பல மணித் துளிகளின் தொகுப்பாகப் பிரித்தறிந்து, அம்மணித்துளிக்கு 'ஒரை' என்றும், *நாழிகை’ என்றும் பொழுது’’ என்றும் பெயர் சூட்டியிருந் தனர். 'மறைந்த ஒழுக்கத்து ஒரையும் நாளும்’ (தொல் பொருள் : களவு : 44). நாழிகைக் கணக்கர் (சிலம்பு, இந்திர விழா : 49) பொழுது என வரைதி (புறம் : 8), ஒருபொழுதும் வாழ்வது அறியார்': (குறள் , 337) என்ற அகச் சான்றுகளைக் காண்க:

ஒரை, நாழிகை, பொழுது இவற்றைத் துல்லியமாகக் கணித்துக் கூறவல்ல கருவியாம் குறுநீர்க் கன்னலையும், அதை இயக்கி, நாழிகை அறிந்து கூறவல்லாரையும் பண்டைத் தமிழகம் பெற்றிருந்தது. 'பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள், தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி, எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப' (முல்லைப் பாட்டு : 55.58), யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி' (நற்றி :132) : யாமம் காவலர் (குறுந் : 378); யாமம் கொள்பவர் சுடர் நிழல்' (புறம் : 37):