பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை 15 ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம், நார்டிக் எனப்படும் வட மேற்கு ஐரோப்பிய நாகரீகம் என அழைக்கப்பட்டன.மத்திய தரைக் கடலைச் சார்ந்து நிலவிய நாகரீகத்தையும், ஆல்ப்ஸ் மலையின் இருபக்கத்தும் நிலவிய நாகரீகத்தையும் ஆராயத் தொடங்கியபோதுதான், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில், அம்மக்கள் வாழும் சுற்றுச்சூழல் செலுத்தும் ஆட்சியின் இயல்பு உணரப்பட்டது. ஆகவே, முதல் இரு நாகரீகங்களும் அவ்வாறு பெயரிடப்பட்டன.மூன்றாவது இயல்பினைக் காட்டவல்ல இடப்பகுதி, யுரேஷியா எனப்படும், பிரிவுறாத ஆசிய ஐரோப்பியப் பெருநிலப்பரப்பின் வடபகுதியைச் சார்ந்தது. ஆகவே மூன்றாவது நாகரீகம் அவ்வாறு பெயரிடப்பட்டது. தமிழ்ப்பெயர் சூட்டுவதாயின் மத்திய தரைக்கடல் நாகரீகம், நெய்தலாம். ஆல்ப்ஸ் மலை நாட்டு நாகரீகம் குறிஞ்சியாம். நார்டிக் நாகரீகம் முல்லை யாம். மேற்கு ஐரோப்பிய நாடுகள் 19ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாகத் தொழில்மயமாக்கப்பட்டு, பண்டைக்காலத்து ஐரோப்பிய மக்களுக்கு ஆறும், அது ஒடும் பள்ளத்தாக்காம் நிலப்பரப்பும் செலுத்திய ஆட்சித்திறன் அறவே மூடி மறைக்கப்பட்டுவிட்டமையால், மிக மிக முக்கிய நாகரீகமாகிய மருதம் என அழைக்கப்படும் ஆற்று வெளி நாகரீகம் அறவே புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பரந்து கிடப்பதுபோன்று ஐரோப்பாவில் பாலைவனம் எதுவும் இல்லை. அராபிய நாடோடி இனத்தவரின் நாகரீக இயல்பினைக் காட்டவல்லது பாலைவனம். மக்கள் இனப் பண்பாட்டு நிலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர் களின் கடைக்கண் பார்வையை, இது, ஒரு சிறிதே பெற்றுள்ளது. மனிதன் பண்டு கடந்துவந்த நாகரீகத்தின் படிக்கட்டுகள் ஐந்து, அவையாவன: வேட்டையாடல், நாடோடிவாழ்க்கை, கால்நடை மேய்த்தல், கடல்மேற் சேறல், தொழில் மயமும் கலந்த உழவுத்தொழில் மேற் கோடல்: இவை, முறையே குறிஞ்சி, பாலை, முல்லை. நெய்தல், மருதத் திணைகளுக்கு நிகராகும். ஒவ்வொரு நில: பிரிவையும் சார்ந்த, இயற்கை வளங்களின் இயல்புகள்