பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

ஏனோ? அவ்வாறு குழம்பிய காரணத்தால்,களவியல் கூறாதிருக்கவும், அகத்தியர், 8140ஆண்டு, வாழ்ந்ததாகக் களவியல் உரை கூறுவதாகத் தாமே கற்பனை செய்து கொண்டதேயல்லாது, வேறு இல்லை.

'கடைச் சங்க காலமாகிய 1850 ஆண்டுகால அளவில், அச்சங்கம் புரந்த 49 அரசர்கள் இறந்து போயிருக்க, 49 புலவர்கள், 1850 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர் என்பது நம்ப இயலாத ஒன்று' என்பது, பி. டி. எஸ். அவர்களின் பிறிதொரு குற்றச்சாட்டு. கடைச் சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஒவ்வொருவரும் 1850 ஆண்டுகள், ஒரு சேர வாழ்ந்திருந்தனர் எனக் களவியல் உரை கூறவில்லை. அதுகூறியிருப்பதெல்லாம், இனிக் கடைச்சங்கமிருந்து தமிழா ராய்ந்தார். சிறு மேதாவியரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றுார் கிழாரும், இளந்திரு. மாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மருதன் இளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத் தொன் பதின்மர் என்ப அவருள் விட்டு, நானுாற்று நாற்பத்தொன்பதின்பர் பாடினார் என்ப', இவ்வளவே. இதில், தமிழாராய்ந்த அந்த நாற்பத்தொன்பதின்மரும், 1850 ஆண்டுகள் ஒரு சேர இருந்து அப்பணி புரிந்தனர் எனக் கூறப்படவில்லை. அந்த 1850 ஆண்டு கால அளவில் 49 அரசர்கள் ஆட்சி புரிந்திருந்தது போலவே, அந்த ஆண்டு கால அளவில் அந்த 49 புலவர்கள், தமிழாய்வுக்குத் தலைமை வகித்தனர் என்பதே அத்தொடர் அளிக்கும் தெளிவான கருத்தாகும். ஆக, களவியல்உரைகூறாத ஒன்றைக் கூறியதாகப், பிழைபடக் கொண்டுவிட்ட மயக்கமே, திருவாளர் பி. டி. எஸ். அவர்களின் இக்குற்றச் சாட்டிற்குக் காரணம்; அவர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

சங்க இலக்கியத் தொகை நூல்களில். பாண்டியரை வெற்றி கொண்ட, சோழ அரசர் சிலரைப் புகழ்ந்து பாராட்டும், புறநானூற்று 81, 33 பாடல்கள் போலும் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அத்தகு பாக்களைப் பாடிய புலவர்கள்,