பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377

மூன்று தமிழ்ச் சங்கங்கள்.

பாண்டிய அரசர்களால் புரக்கப்பட்டு வந்த தமிழ்ச்சங்கத்தில் இடம் பெற்றிருக்க இயலும் என்பதும், அத்தமிழ்ச் சங்கத்தால் ஏற்துக்கொள்ளப்பட்டிருப்பர் என்பதும், பாண்டிய அரசர்கள் ஆணையால் தொகுக்கப்பெற்ற தொகை நூ ல் க ளி ல், அப்பாக்கள் இடம் பெற்றிருக்க யலும் என்பதும், அறவே நம்புதற்கு இயலாதனவாம்". (தமிழர் வரலாறு, பக்கம்: 233)

முச்சங்கம் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் காட்டும் காரணங்களுள் மூன்றாவது காரணம் இது.

நாடு, அரசர் அனைவர்க்கும் பொது எனும் சொல்லைத், தாங்கிக்கொள்ளமாட்டாது (போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறாஅது புறம் :8) இருகடல் நீரும் ஒரு பகல் ஆடும்’ ஆசைப் பெருக்கால், பிற அரசுகளை அழித்துத் தனி அரசு செலுத்தும் நிலை, தமிழகத்தில் ஒரு சில காலங்களில் இருந்தது என்றாலும், அதுவே, அக்கால அரசியல் பொது நிலையாக அமைந்துவிடவில்லை. மூவேந்தர்கள், தம்முள் பகையொழிந்து ஒன்றுபட்டிருந்த நிலையும் இல்லாமல் போய்விடவில்லை. மாரி வெண்கோ என்ற சேரவேந்தனும், கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டியனும், இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ வேந்தனும் ஒன்றுபட்டு வாழ்ந்திருக்க, அக்காட்சி நலம் கண்டு களிப்புற்ற ஒளவையார், 'முத்தீப் புரையக் காண்தகு இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்.' (புறம் : 367) என அவர்களைப் பாராட்டியிருப்பதும் நிகழ்ந்துளது.

குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திரு மாவளவன் என்ற சோழனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்ற பாண்டியனும் புகை மறந்து நட்புப் பூண்டிருந்த நலத்தகு காட்சியைக் கண்ணுற்ற காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், பால் நிற உருவின் பனைக் கொடியோனும், (பலராமன்), நீல் நிற உருவின் நேமியோனும், (கிருஷ்ணன்) என்று இரு பெரும் தெய்வம் உடன் நின்றாஅங்கு. உருகெழு.