பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

379

 எனத் , தம் குலப்பாண்டியர் தலைநகரைப் பாராட்டிய ஒரு பாட்டில் (அகம் : 94), ஆரம்கண்ணி அடுபோர்ச் சோழர் அறங்கெழு நல்லவை உறந்தை எனவும், கடும் பகட்டுயானை நெடுந்தேர்க்கோதை, திருமாவியன் நகர்க் கருவூர் எனவும், தம்குலப் பகைவர்களாம் சோழனையும், சேரனையும் பாராட்டியுள்ளார். அது மட்டுமன்று, சோழ நாட்டுப் பேரரசனை மட்டுமே அல்லாமல், அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவனாம், பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பானையும் பாடியுள்ளார். (புறம் : 895) பாடியது மட்டுமல்லாமல், அவனைப் பாராட்டிய பின்னர், அவனை மறக்க மாட்டேன், பிறரை நினைக்க மாட்டேன் - "அவன் மறவலேனே; பிறர் உள்ளேனே'’ எனக் கூறுவதன்மூலம், தன்னை மறப்பதும் செய்துள்ளார் என்பது அறிந்தும், நக்கீரரைப், பாண்டியன் புறக்கணித்துவிட்டாதாக வரலாறு இல்லை.

நக்கீரரே அல்லாமல், அவர் தந்தையார் மதுரைக் கணக்காயனாரும், தம்முடைய பாட்டு ஒன்றில், (அகம் : 338) மலைகளால் நிறைந்த இவ்வுலகம் புகழ்ந்து கூறும் நாட்டினையும், வீரம் மிக்க நாற்படைகளையும் உடைய பேரரசர்கள் பலருள்ளும், அறநெறிவழுவாச் செங்கோலும், பகையரசர் தம் ஆண்மையை அழித்த உரம் வாய்ந்த தோளும், அதனால் பலரும் பாராட்டும் புகழ்ச் செல்வமும் வாய்க்கப் பெற்ற பசும்பூண் பாண்டியன் - (குன்றோங்கு வைப்பின் நாடு மீக் கூறும், மறங்கெழு தானை அரசருள்ளும், அறங்கடைப் பிடித்த செங்கோல், உடனமர் மறஞ்சாய்த் து எழுந்த வலன் உயர் திணிதோள், பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்) எனத் தன்னைப் பாராட்டினார் என்றாலும், அதே பாட்டில், தன் குலப் பகைவர்களாம் சேரனையும், சோழனையும், முறையே, 'ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும், துன்னரும் துப்பின் வெள்வேல் பொறையன் என்றும், புனிற்று ஆன்தரவின் இளையர் பெருமகன் தொகு போர்ச் சோழன்'’ என்றும் பாராட்டியிருப்பது கொண்டு, அவர் பால் சினம் கொண்டு, அப்