பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

தமிழர் வரலாறு

பாட்டை அகநானுற்றுத் தொகுப்பிலிருந்து அகற்றிவிட வில்லை:

தம் அவைக்களப் புலவர்களாய் இருந்து, தம்மைப் பாடிய புலவர்கன், தம் குலப் பகைவர்களையும் பாடியிருப்பது கொண்டு, அப்புலவர்களை வெறுத்து வெளியேற்றாது, ஏற்றுப் போற்றியது மட்டுமல்லாமல், அம் மூவேந்தர்கள், தம் குலப் பகைவர்களைத், தம் வாயால் தாமே பாராட்டுவதும் செய்துள்ளனர்.

பருவூர் எனும் இடத்தில் நடந்த பெரும் போரில் தன் குலமாம் சேரர் குலத்து வந்த வேந்தன் ஒருவனும். பாண்டியன் ஒருவனும் தோற்று அழிய, அவர்களின் யானைப் படையைக் கைக்கொண்ட சோழ வேந்தன் ஒருவனையும், அவன் மகன் அஃதை என்பானையும் பாராட்டியுள்ளார், மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற சேரர் குலச் செம்மல் ;

'அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய
ஒளிறுவாள் நல்ல மர்க் கடந்த ஞான்றை'

- - அகம் 96

தன் நாட்டைக் கடல் கொள்ள, அதை ஈடு செய்வான் வேண்டிச், சோழனையுத், சேரரையும் வென்று, சோழர்தம் புலிக் கொடியையும், சேரர்தம் விற்கொடியையும் அகற்றி விட்டு, ஆங்கே தம் மீன் கொடியை உயர்த்திய சோழர் குலப் பகைவர்களுள் ஒருவராகக் கருதப்படும், பாண்டியர் குலத்து வந்தான். ஒருவனைப் பாராட்டியுள்ளார், நல்லுருத்திரன் என்ற சோழர் குலத்து நல்லார் ஒருவர்.

'மலிதிரை உணர்ந்து தன்மண் கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்