பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

தமிழர் வரலாறு

ஆகவே, கபிலர், தமிழகத்தின் பெரும்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது உறுதி.

குடக்கோ நெடுஞ்சேரல் இரும்பொறை, செங்குட்டுவன் ஆகிய சேரவேந்தர்களையும், உருவப்பஃறேர் இளஞ்சேட் 'சென்னி, வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி ஆகிய சோழ அரசர்களையும், பேகன். மலையமான் திருமுடிக் காரி, ஆஅய் அண்டிரன், அதியமான் நெடுமான் அஞ்சி, கண்டீரக்கோ. பெருநள்ளி, வல்வில் ஒரி, ஆட்டனத்தி, ஆதிமந்தி, நன்னன், ஆய் எயினன், அகுதை, அன்னிமிஞிலி, அழுந்துர்த் திதியன், தித்தன் வெளியன், பாணன், கட்டி, பொருநன், கணையன், மத்தி, கழுவுள், அழிசி, சேந்தன், மாந்தரம் பொறையன், ஊணுார்த்தழும்பன், விரான், விச்சியர் பெருமகன், பழையன், வல்லங்கிழவன், பொதியில் திதியன் ஆகிய எண்ணற்ற சிற்றரசர்கள், வீரர்கள், வள்ளல்களை அறிந்துள்ளார். வாகைப் பறந்தலை, வெண்ணிப் பறந்தலை, கூடற் பறந்தலை, பாழிப்பறந்தலைப் போர்களைக் கண்டுள்ளார். கழார்ப்பெருந்துறை நீர் வி ழா வி ல், ஆட்டனத்தி மறைந்தது, கரிகால் வெண்ணியில் பெற்ற கன்னிப்போர் வெற்றி குறித்து அழுந்துாரில் விழா நிகழ்ந்தது. நறுமா தின்ற பெண் ஒருத்தியை நன்னன் கொன்றது : பாழியில் வேளிர் பெருநிதி சேர்த்து வைத்திருப்பது, தந்தையின் கண்ணைப் போக்கிய கோசரை, அன்னிமிஞிலி பழி வாங்கியது, மனைவியைப் பிரிந்து, பேகன் பரத்தையொடு வாழ்ந்திருந்தது ஆகிய நிகழ்ச்சிகளை அறிந்து வைத்துள்ளார்: ஆகவே, பரணர் பாரெல்லாம், சுற்றிய பெரு நடையாளர். என்பது பெறப்படுகிறது.

சேரன் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி, நாஞ்சில் நாட்டுப் பொருநன் ஆகியோரைப் பாடிய ஒளவையும், தமிழகம் எங்கும் சென்று வந்தவரே.