பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

தமிழர் வரலாறு

சோழ நாட்டு உறையூர் ஏணிச்சேரியைச் சேர்ந்த முடமோசியார், பாண்டி நாட்டுப் பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியை அரசிருக்கையாகக் கொண்ட அண்டிரனைப் பாடியுள்ளார்.

சோழ நாட்டு நன்னிலத்துக்கு அணித்தாக உள்ள எருக்காட்டுரைச் சேர்ந்த தாயங்கண்ணனார், சேர நாட்டுப் பேரியாற்றையும், முசிறித் துறையையும், தங்கள் நாட்டுப் பொற்காசுகளைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, நம் நாட்டு மிளகுப் பொதிகளை ஏற்றிக்கொண்டு போகும் யவனர் கடல் வாணிகத்தையும் கண்டுள்ளார் ; அந்நாட்டு உம்பற்காட்டுக் காட்சி நலனையும் கண்டு களித்துள்ளார்.

சேரர்க்குரிய கருவூரினராகிய கந்தப் பிள்ளை, பாண்டி நாட்டுத்தென்கோடி நாடாம் நாஞ்சில் நாட்டு வள்ளுவனைப் பாடியுள்ளார்.

தமிழகத்தின் வட எல்லையாம் தொண்டை நாட்டினராகிய கல்லாடனார், பாண்டி நாட்டுத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனையும், சேர நாட்டுக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலையும் பாராட்டியுள்ளார்.

பாண்டி நாட்டைச் சேர்ந்த பிசிராந்தையார் சேர நாட்டிற்கு வந்து வடக்கிருந்து உயிர் துறந்துள்ளார்.

தம் புலமை மதித்துப் பரிசு வழங்கிப் புரக்கத் தக்க பேராளர்களின் வாழிடம் நனி மிகச் செய்மைக் கண்ணதாயினும், கடந்து செல்ல வேண்டிய வழி கடத்தற்கு அரியது என்று பாராதே, தமிழ்நாடு முழுவதையும் வலம் வந்த புலவர் பெருமக்கள், அவ்வாறு சென்றுவந்த தம் செயலைத், தம் வாயால் தாமே கூறியும் உள்ளனர். நெடிய என்னாது சுரம் பல கடந்து ..... வரிசைக்கு வ ரு ந் து ம் இப்பரிசில் வாழ்க்கை (புறம் : 47) எனக் கோவூர் கிழாரும், அத்தம் ஒன்றிரண்டல பல கழிந்து...... காண்டு வந்திசின் (பதிற்றுப்பத்து : 4) எனப் பரணரும் ; குன்றுபல நீந்தி வந்து