பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

தமிழர் வரலாறு

கங்கை ஆடச்சென்று, கங்கைக் கரையில் செங்குட்டுவனைக் கண்டுள்ளான் (சிலம்பு : நீர்ப்படை 69-110)

வஞ்சியில் நடப்பன அனைத்தையும், இமயம் முதல் குமரிவரையான நாவலந்தீவில் அரசோச்சும் அரசுகள் அனைத்தும் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், அச்செய்திகளை அறிந்து அறிவிக்கும், அப்பல்வேறு நாட்டு ஒற்றர்களும், வஞ்சி மாநகரில் வந்து குழுமி ஒற்றறிந்து வந்துள்ளனர். (சிலம்பு : காட்சி : - 73-74)

பழந்தமிழ்ப் புலவர்களும், மக்களும் தமிழகம் முழுவதுமே மட்டுமல்லாமல், கங்கைக் கரைவரையும் சென்று வந்தமைக்கான இத்தகைய அகச்சான்றுகள் எண்ணற்றன இருக்கவும், அவற்றை நம்ப மறுக்கும் திருவாளர் பி. டி. எஸ் அவர்கள், தம்முடைய தமிழர் வரலாற்று நூலில், 'கி. மு. ஏழாம் நூற்றாண்டில், காந்தார நாட்டில் வாழ்ந்த பாணினி (பக்கம்; 113, 118) எழுதிய இலக்கணத்திற்கு விளக்கமும், விரிவுரையும் எழுதிய காத்தியாயனர் ஒரு தென்னாட்டவர் ஆவர் (பக்கம் : 135) என்றும், அதுபோலவே . கி. மு. நான்காம் நூற்றாண்டில், மெளரியப் பேரரசு கண்டு, சந்திரகுப்தனை அதன் அரியணையில் அமர்த்திய சாணக்கியன் தமிழகத்துக் காஞ்சியைச் சேர்ந்தவன் (பக்கம் ; 142, 143, 325) என்றும், அச் சாணக்கியனின் சமகாலத்தவனும், (பக்கம், 327) கங்கைக் கரை நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவனும் (பக்கம் : 615) ஆகிய நாகார்ஜுனன், சாணக்கியனைப் போலவே காஞ்சியைச் சேர்ந்தவன் {பக்கம் : 3,25) என்றும் கூறியுள்ளார்.

கி. மு. ஏழாம் நூற்றாண்டில், ஒரு தென்னாட்டவர், காந்தாரம் சென்று ஆசிரியப் பணிபுரிந்தது நம்பக்கூடிய உண்மையாகிறது. அதுபோலவே, கி. மு. நான்காம் நூற்றாண்டில் தொண்டை நாட்டுப் பாலாற்றங்கரையைச் சேர்ந்த இருவரில் ஒருவர், கங்கைக் கரையில் ஒரு பேரரசை நிறுவி, அதன் முதல் அமைச்சர் ஆகவும், பிறிதொருவர். அக்கங்கைக்கரையில் அமைந்த ஒரு பல்கலைக்கழகத்துப்