பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

தமிழர் வரலாறு

தமிழ்ப் பாக்கள் தோற்றத்தின் பிற்பட்ட கால எல்லை, கி. மு. 1000 ஆகும் என்பதையும், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் 500 ஆண்டுகள் அளவில், எண்ணில் அடங்காப் பாடல்கள் பாடப்பெற்றிருக்க வேண்டும் என்பது, ஒரு நடுநிலை மதிப்பீடு என்பதையும், திருவாளர் பி.டி.எஸ். அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். (பக்கம் 70, 71 அது கூறும் அவரே, தொல்காப்பிய இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்த, அப்பாடல்கள் அனைத்தும், அத் தொல்காப்பியத்துக்கு விளக்கம் அளித்த உரையாசிரியர்கள் காலத்துக்கு முன்பே, ஒன்று கூடக் கிடைக்காத அளவு அழிந்துபோய்விட்டன. இதையும் திருவாளர், பி.டி.எஸ் அவர்கள் உணர்ந்துள்ளார்கள் (பக்கம் : 70)

தொல்காப்பிய இலக்கண விதிகளுக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டினைக் காட்டமாட்டாது இடர்ப்படும் உரையாசிரியர்கள், தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்கள் பற்றியோ, அவர் பாடல்கள் பற்றியோ குறிப்பிட்டுள்ளனரா என்றால் இல்லை. தொல்காப்பிய உரையாசிரியர்கள், தொல் காப்பியத்துக்கு முன்பு பாடப் பெற்ற பாக்கள், பாடிய புலவர்கள் பற்றிக் குறிப்பிடா மையைக் காரணம் காட்டித், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர்ப் புலவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாரா திரு. பி.டி. எஸ். அவர்கள் என்றால், இல்லை; தொல்காப்பிய உரையாசிரியர்களே அது செய்யா திருக்கும் போது, அவர்களுக்கு நனி மிகப் பிற்பட்ட காலத்தவராய களவியல் உரைகாரர், தமிழ்ச்சங்கம் பற்றி எதுவும் கூற வில்லை என்பதைக் காரணம் காட்டி, தமிழ்ச் சங்க அமைப்பு குறித்து ஐயம் கொள்வது, "வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப் படவில்லை. ஆகவே வேதகாலத்தில் ஆலமரமே இல்லை என்பது போலும் அறிவொடு பொருந்தா வாதமாம்.

எட்டுத் தொகைப் பாடல்கள், கடைச்சங்க காலத்துப் புலவர்களால் பாடப்பெற்றவை என்கிறது களவியல் உரை: ஆனால் புறநானூற்றின் முதல் பாடலே. அக்களவியல்

;