பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394 தமிழர் வரலாறு

எட்டுத் தொகை நூல்களாகத் தொகுக்கப்பெற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செய்யுட்களில், புலவர்களின் பேரவை ஒன்று தொடர்ந்து இருந்து வந்தது என்பதை உணர்த்தும், ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்லோ இடம் பெறவில்லை. அதுபோலும் பேரவை ஒன்று இருந்திருந்தால், எதிர்த்து வந்து நிற்கும் பகைவர்களை வெற்றி கொள்ளத் தவறுவேனாயின், சிறந்த புகழும் உயர்ந்த புலமையும் வாய்ந்த மாங்குடி மருதரைத் தலைவராகக் கொண்ட, உலகுள்ளளவும் நிலைத்து நிற்கும் பெரும்புகழ் வாய்ந்த புலவர்களால், என்நாடு, பாடப் பெறுவது இல்லாது போவதாக’ என்ற தன் வஞ்சின உரையில் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அதைக் குறிப்பிட்டிருப்பன். அவன் குறிப்பிடவில்லை. ஆகவே, அவன் காலத்தில், தமிழ்ச்சங்கம் என்ற ஓர் அமைப்பு இடம் பெற வில்லை ; அல்லது, புலவர்கள் கூடிய அவை சங்கம் என்ற பெயரால் அப்போது அழைக்கப்படவில்லை என்று கொள்ளலாம். மேலும், அவன் வஞ்சின உரையில் இடம் பெற்றிருக்கும், 'மாங்குடி மருதன் தலைவனாக' என்ற தொடர், கடைச்சங்கத்தின் தலைவர் நக்கீரர் என்ற பொது நம்பிக்கையையும் பொய்யாக்கிப் போட்டு விடுகிறது. (தமிழர் வரலாறு : பக்கம் : 238-239)

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை'. -புறம் : 72;

முச்சங்கங்கள் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் காட்டும் காரணங்களுள் எட்டாவது காரணம் இது.

கற்க வேண்டியவற்றைக் கற்று, அவை அளித்த அறிவால் நிரம்பப்பெற்றவர்தம் கல்விச் செல்வம், சொற்களையும்,