பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 397

பண்டு இருந்தது: கூத்தாடுபவரையும், அது கண்டு களிப்பாரையும் கொண்ட குழுவும் இருந்தது. அவ்வாறு பலர் கூடிக், குழுவாக இருக்கும் நிலை அத்தனைக்கும், அக்காலத்தில் வழங்கிய பெயர் 'அவை' என்பதே. 'உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற்று’ (புறம் 39) 'அறங்கெழு நல்லவை உறந்தை' (அகம் : 93) 'உறந்தை நாளவை' (அகம் : 226) 'முரசு குழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம்' ( பொருநராற்றுப்படை : 54 - 55), :'கூத்தாட்டவைக் குழாம்' (குறள் : 332) என்ற தொடர்களைக் காண்க:

கடைச்சங்கத்துக்குத் தலைமை வகித்த புலவர்களாக, இறையனார் களவியல் உரை கூறுவோரில், பெருங்குன்றூர் கிழார், நக்கீரர் பாடல்களிலும், 'அவை' என்ற சொல் இடம் பெற்றுளது. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிய பெருங்குன்றூர் கிழார் பாட்டில் சான்றோர் இருந்த "அவை" (புறம்: 266) என்ற தொடரிலும் நக்கீரரின் அகநானூற்றுப் பாட்டில், 'அறங்கெழு நல்லவை உறந்தை' என்ற தொடரிலும், அது இடம் பெற்றிருப்பது காண்க.

ஆக, அரசவை, அறங்கூறவை, கூத்தாட்டவைகளைப் போலவே, கற்றுவல்லார் கூடிக், கல்வி ஆய்வு செய்யும் அவையும் பண்டைத் தமிழகத்தில் இருந்தது என்பது உறுதி ஆகிறது. ஆகவே, 'முறையாக அமையும் கலைக்கழகம் என்ற எண்ணமே நவீன காலத்தைச் சேர்ந்தது. ஆகவே, அத்தகு அமைப்பைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர்க் கொண்டுபோவது, மிகப் பெரும் காலக்கணிப்பு வழுவாகும்' (பக்கம் : 23 ) என்ற, திரு. பி. டி. எஸ். அவர்களின் கூற்று பண்டைய வரலாற்று உண்மைகளைப் பழுதற உணராமையால் கொண்ட தவறான முடிவாகும்.

மேலும், பலர் கூடியிருக்கும் ஒர் அமைப்பை, வழி நடத்திச் செல்ல, அவர்களுக்குள்ளாகவே ஒருவர் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அவ்வாறு வழிநடத்திச்