பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

தமிழர் வரலாறு

அள்ளல் அம்கழனி உள்வாய் ஓடிப் பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சால் உழவர் கோல்புடை மதரிப் பைங்கால் செறுவின் அணைமுதல் புரளும்"

-நற்றிணை : 340 8-8

ஆற்றுப் பள்ளத்தாக்கு வாழ்க்கைமுறைபற்றிய இன்னொரு செய்யுள் இதோ : "செந்நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போன்ற செந்தாமரை மலர்களின் இடை -யிடையே, கதிர் முற்றிய செந்நெல்லின் தாளை அரிந்து அரி அரியாகப் போட்டுப் பணி முடிந்த உழவர், தங்களுக்குக் கள் குடங்களைக் கொண்டுவரும் வண்டி, சேற்றில் ஆழ்ந்து விடின், அதுபோக்கச் சிறந்த கரும்புத்தடிகளை அடுக்கி இடை மடுக்கும், பாயும் புனலால் வளம் மிக்க ஊரின் தலைவனே! நெற்பொரிகள் போலும், புன்கம்பூ மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற நீர்த்துறைகள் அழகு பெற, ஒளிவீசும் நெற்றியும், நல்லமணம் மிக்க மலர்கள் சூடிய, காண்பதற்கு இனிமை தரும் திரண்ட கூந்தலும், மாவடுக்கள் போலும் கண்களும், மார்பில் அசையும் முத்துச் சரமும், இவற்றால் ஆம் நுண்ணிய அழகும் உடையாளோர் இளம் பரத்தையொடு, இடையறாது ஒடிக்கொண்டே இருக்கும் புனலில், நேற்று விளையாடி மகிழ்ந்தனை என்று ஊரார் பலரும் கூறுவர்: ஆகவே, உறுதியாக, நீ, நாணம் இழந்தவனே".

எரி அகைந் தன்னை தாமரை இடையிடை அரிந்துகால் குவித்த செந்நெல் லினைஞர், கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுரின், ஆய்கரும்பு அடுக்கும் பாப்புனல் ஊர: பெரிய, நாணிலை;மன்ற;பொரி எனப் புன்குஅவிழ் அகன்றுறைப் பொலிய, ஒன்துதல், நறுமலர்க் காண் வரும் குறும்பல் கூந்தல், மாழை நோக்கின்,காழ் இயல் வனமுலை