பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/443

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தமிழர் வரலாறு




இரும்பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஒங்கு மணல் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர் பாயும்"

- புறம் ; 24 : 1-16


(முந்நீர் உண்டு - (பனை நுங்கின் நீர், கரும்பின் சாறு, வெங்கின் இளநீர் - ) முந்நீர் (ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்) பாயும்"என்ற வரியில் அழகிய சொல்லோவியம் அமைந்திருப்பது காண்க)

தலைவனை, ஓர் இரவு தங்கித் தலைவிக்கு ஆறுதல் அளிக்குமாறு தோழி வற்புறுத்தும் ஒரு செய்யுள், நெய்தல் நிலத்து வாழ்க்கை நிலை, வாழ்க்கை முறைகள் பற்றிய மற்றொரு காட்சியைத் தருகிறது. மீன் உண்ணும் பசிய கால்களை உடைய வெண்ணிறக் கொக்குக் கூட்டம் செவ்வேள்முருகன் மார்பில் கிடந்து ஒளிவிடும் வெண் முத்தாரம் போல, செவ்வானத்தில் எழுந்து வரிசையாக பறந்து போமாறு, பகற்பொழுதை மெல்ல மெல்லக் கழித்து விட்ட ஞாயிறு, மேற்கு மலையில் சென்று மறைந்துவிட்டான். மிக்க நாணத்தையும் மெல்லிய சாயலையும் உடைய சிறியவளாகிய இவளோ, தன் சிறந்த அழகு கெடுமாறு, உன் பிரிவுக்கு ஏங்கி, அழகிய குளிர்ந்த கண் கலங்க ஓயாது அழத் தொடங்கிவிட்டாள். தலைவ! அதனாலும், உப்பங்கழியில் உள்ள சுறா மீன் குத்தியதால் புண்ணுற்ற கால்களையுடைய உன் கோவேறுகழுதை, நீர் நிறைந்து கறுத்துத் தோன்றும் நீண்ட கழியைக் கடக்கமாட்டாது மெலிந்து விட்டது ஆதலாலும், வலிய வில்லேந்தி உன் உடன் வரும் வீரர்களோடு, இவ்விரவில் செல்லாது, இளைப்பாறி, பனைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வெண்மணல் பரந்து கிடக்கும் தோட்டங்களில், தன் துணையை அழைப்பான்வேண்டி, அன்றில் அகவும் அவ்விடத்தில், சின்னம்சிறு பூங்கொத்துக்-