பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள் 419 களையுடைய நெய்தல் வளர்ந்துகிடக்கும். உப்பங்கழி சூழ்ந்த எங்கள் நாட்டின்கண், நீ தங்கிச் செல்வாயாக; அவ்வாறு தங்கிச் செல்வதால் வருவதொரு கேடு ஏதேனும் உண்டோ", "நெடுவேள் மார்பின் ஆரம் போலச், செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் பைங்கால் கொக்கின் நிறை பறை உகப்ப எல்லை பைபயக் கழிப்பிக், குடவயின் கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு: மதரெழில் மழைக்கண் கலுழ, இவளே பெருநாண் அணித்த சிறுமென் சாயல் மாண் நலம் சிதைய, ஏங்கி ஆனாது அழல் தொடங் கினளே; பெரும ; அதனால் கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து அசைஇ, வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே, சிதைகுவது உண்டோ? பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை அன்றில் அகவும் ஆங்கண், சிறுகுரல் நெய்தல் எம் பெருங்கழி நாடே" -அகம் : 120 மணல் பரந்த பாலையில் : வறண்ட பாலையில், வாழ்க்கை நிலை மிகவும் கடினமாம். "தூய வெள்ளை ஆடையை விரித்து விட்டாற் போல் தோன்றுமாறு வெயில் விரிந்து காயும், கோடைப் பருவம் நீண்ட மலைச்சாரலில், கொடிய பசியுடைய செந்நாய், வாடிய மரையாவைக் கொன்று வேண்டுமட்டும் தின்று, விட்டொழித்த எஞ்சிய இறைச்சி, நெடுந்தொலைவில் உள்ள வேற்று நாட்டிலிருந்து, கடத்தற்கு அரிய