பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மக்கள் வாழ்க்கை

கி. பி. ... ஆண்டுகள்

431

பாலனைத்தையும் தயிராக்கும் நிகழ்ச்சி, களம் புகுந்த ஒரு பெருவீரன், அக்களத்தில் நிறைந்து நிற்கும் நாற்படை அனைத்துக்கும் உயிர் போக்கும் நோயாகி நிற்கும் தன்மைக்கு உவமையாகக் கூறப்பட்டுளது.

'மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப் படைக்குநோய் எல்லாம் தான் ஆ யினனே'.

-புறம் : 276 : 3-5 கடுகு மிளகு முதலாம் தாளிப்புப் பொருட்களைக் கலந்து உணவிற்கு மணம் ஊட்டுவதும் கூறப்பட்டுளது. குய்க்கொள் கொழுந்து வை' (புறம் : 1.60 : 1) குய்யுடை அடிசில்' (புறம் : 1.27 ; 7) சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல் போலும் இனிய பொழுதுபோக்குகள் பற்பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. தச்சன் செய்து கொடுத்த சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில் அமர்ந்து சென்று இன்புறல் இயலாது எனினும், அதைத் கயிறு கொண்டு ஈர்த்துச் சென்று இன்பம் அடையும் சிறுவர் சிறுமியரின் இன்ப விளையாட்டில் இன்பம் கண்டுள்ளார் ஒரு புலவர்.

தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்து இன் புறா அர் ஆயினும், கையின் ஈர்த்து இன்புறு உம் இளையோர்',

- குறுந்தொகை : 61 : 1 - 3 தாம் தொடுத்த மலர்மாலையை அணிந்துகொண்டு, மூங்கில் போலும் பருத்த தோள் உடையேம் என்ற துணிவால் கடல் நீரில் புகுந்து ஆடிய மகளிர், கடற்கரைக் கானல் சோலையில் பரந்து கிடக்கும் மணலால் சிற்றில் கட்டி விளையாடும் இன்பக் காட்சியைக் காட்டியுள்ளார் ஒரு புலவர்.

துளைத்த கோதைப் பணைப்பெரும் தோளினர், கடலாடு மகளிர் கானல் இழைத்த சிறுமனை',

--குறுந்தொகை : 326 : - 3