பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

433

புள்ளிப் புள்ளியாகத் தோன்றும் நிழலில், பொற்கொல்லன் பால் உள்ள பொன்னுரைகல் போலும் வடிவில் வட்டமான அரங்கை வரைந்துகொண்டு, நெல்லிக் காய்களை வட்டுக்களாகக் கொண்டு, பாண்டில் ஆடும் அழகும் ஒரிடத்தில் கூறப்பட்டுளது :

‘’வேம் பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன் வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் தெல்லிவட் டாடும்‘’
-நற்றிணை : 3 : 2 - 4

கூரை வேய்ந்த நல்ல மனைக்கு உரியவராகிய குறுந் தொடிகளை அணிந்த மகளிர், தங்கள் மனையின் முன்புறத்தில் பரப்பியிருக்கும் புது மணலில் அமர்ந்து, கழற்சிக் காய்களைக் கொண்டு கழங்காடிக் களித்திருப்பர்.

‘’கூரை நன் மனைக் குறுந்தொடி மகளிர்,
மண லாடு கழங்கு.‘’
-நற்றிணை 79 : 2 - 3

மகளிர் விளையாட்டாகப் பல இடங்களிலும் கூறப் பட்டிருப்பது ஒரை. பூஞ்சாய்க் கோரை எனும் ஒருவகைக் கோரைப் புல்லால் செய்து மகரந்தப் பொடிகள் பூசிச்செய்த பாவை வைத்து விளையாடும் ஒருவகை விளையாட்டு. ‘’விளையாடு ஆயமொடு, ஒரை ஆடாது.‘’ ‘’ஒள்ளிழை மகளிரொடு ஒரையும் ஆடாய்”. (நற்றிணை: 68:1-8; 1551) "ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர்" (புறம் : 176 : 1)

மகளிரின் மற்றொரு விளையாட்டு அல்வியம்'; ஆண்கோலமும் பெண் கோலமும் உடையவாக இரண்டு பாவைகளைச் செய்துகொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.

‘’வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர்,
-புறம் : 33 : 18 - 18

த.வ.28