பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி.பி.......ஆண்டுகள்

439



மறுகில் தாங்கும் சிறுகுடிப் பாக்கத்து
இயல் முருகு'.
- அகம் : 1.18 :1-5

"குன்றுகள் வேலிபோல் நாற்புறமும் நிற்க, இடையே உள்ள சிற்றுாரில், மன்றத்தில் நிற்கும் வேங்கை மரங்கள், மணநாளாகிய நல்ல நாளில் பூக்கத் தொடங்க, அவற்றின் மணிமணியான அரும்புகள் மலர்ந்த, பொன் போன்ற மலர்கள் உதிர்ந்து, அகன்ற பாறைகளை அழகு செய்யும் முற்றங்களில், குறவர்கள், தங்கள் மனைகளில், குரவை ஆட்டத்தில் கைதேர்ந்த முதிய மகளிரொடு கைகோத்து, ஆரவாரம் எழக், குரவை ஆடி விழா எடுப்பதை விளக்குகிறது ஒரு செய்யுள் :

"குன்ற வேவிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை விரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கவி விழவு‘’

- அகம் 232 : 6-11,

கீழ் நீரில் மீன் ஒடும், மேல் நீரில் கண்போலும் கருங் குவளை மலரும் : உப்பங்கழி நீரால் குழப்பெற்ற பயிர் விளைந்து நிற்கும் கழனிகளில், அவற்றைக் காப்பவர் பறை அடித்து எழுப்பும் அரித்து எழும் ஒசை கேட்டுப், பறவைகள் ஓடிவிடும். அரும்புகள் மிதக்கவிட்ட கள்ளையும், இனிய தேறலையும் நறவையும் குடித்து மகிழ்ந்த கோசர் குரவை ஆடி மகிழ்வதைக் கூறுகிறது, ஒரு செய்யுள்.

‘’கீழ் நீரான் மீன்வழங் குந்து ;
மீ நீரான் கண்ணன்ன மலர் பூக்குந்து :
கழி சுற்றிய விளைகழனி
அரிப்பறையால் புள் ஒப்புந்து ;