பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

தமிழர் வரலாறு

நெருடுநீர் கூஉம் மணல் தண்கால்
மென் பறையால் புள் இசியுந்து ;
நனைக்கள் ரின் மனைக்கோசர்,
தீந்தேறல் நறவு மகிழ்ந்து
தீங்குரவைக் கொளை தாங்குத்து’’

- - புறம் 396 : 1.9

கோசர் சிறந்த வீரர் ; ஆகவே அவர்கள் ஆடிய இக் குரவைக் கூத்து ஒருவகைப் போர்க்கூத்து ஆகும்.

இதனினும் கொடுமை வாய்ந்த ஒரு போர்க்கூத்து , பின்வருமாறு விளக்கப்பட்டுளது. "செங்கரும்புக் கழிகள் மீது காற்றில் அசைந்தாடும் செந்நெற் கதிர்களை வேய்ந்து கட்டிய பந்தல், விழா எடுக்கும் இடம் போலப் பற்பல அழகுடையதாகத் தோன்ற, ஒயாது நெல் குற்றும் உலக்கை ஒலியோடு, பல்வேறு ஒலிகள் ஒலிக்கும் ஆங்கு, பொன்னால் செய்த தும்பைப் பூவாம் போர்ப்பூவுடன் பசிய பனம் தோட்டையும் அணிந்துகொண்டு, கடுஞ்சினம் மிக்க வீரர்கள் கடல் ஒலிபோல், ஆரவாரப் பேரொலி எழுப்பியவாறே, குரவைக் கூத்தை, வெறி கொண்டு ஆடுவர்'‘’

‘’அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும் பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறுவேறு பொலிவு தோன்றக்,
குற்றுஆனா உலக்கையால்
கலிக்சும்மை வியல் ஆங்கண்
பொலந்தோட்டுப் பைந்தும்பை
மிசை, அலங்குளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஒதநீரிற் பெயர்பு பொங்க‘’

- புறம் : 22 : 14.23