பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

தமிழர் வரலாறு

தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அருபோர்ச் செழிய !’'
--புறம் : 26 1-11

நகரங்களில் பரத்தைமை :

நேரிடை நிலை, உருவக நிலை ஆகிய எந்நிலையில் பொருள் கொண்டாலும், நகர வாழ்க்கை என்றால், நாகரிக வளர்ச்சி என்றே பொருள்: நாகரீகத்தின் தெளிவான முத்திரை, விரும்பத்தகாதது எனக் கருதப்படாதாயின், பரத்தைமை ஒழுக்கம் இடம்பெறுவதேயாம். பரத்தையர் ஆடல் பாடல்களில் நன்கு பயிற்சி பெற்றிருப்பர். கண்கவர் வகையில் உடையணித்திருப்பர், அழகுற ஒப்பனை செய்து கொள்வர். விறல்பட ஆடவல்லளாகிய விறலி, மாணிக்க மணிக்கோவை எட்டால் ஆன மேகலை அணியால் அழகு பெற்ற அல்குலும், மடப்பம் பொருந்திய மைஉண்ட கண்களும், ஒளிவீசும் நெற்றியும் கொண்டு, திகழ்தலைக் கூறுகிறது ஒரு புறநானுாற்றுச் செய்யுள்:

இழைஅணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்,
மடவரல் உண்கண், வாள் துதல் விறலி’’
-புறம் : 89 : 1-2

எளிதில் வயப்படக் கூடிய ஆடவரைத் , தங்களோடு, ஆற்றுத்துறையிலும், குளப்படித் துறையிலும் நீராடி மகிழுமாறு தூண்ட வல்லவர் பரத்தையர். ஆடவன் ஒருவனைத் தன் அழகால் மயக்க வல்ல உள் உரம் படைத்த ஒரு பரத்தை, அவன் மனைவிக்குக் கீழ்க்காணும் இறுமாந்த சொற்களைக் கூரி அனுப்பினாள் ,என் கூந்தலில் ஆம்பலின் முழுப்பூவை அணிந்து அழகுசெய்துகொண்டு, புதுவெள்ளம் புரண்டோடும் பெரிய நீர்த்துறையில் புனல் விளையாட்டை விரும்பிச் செல்கின்றேன். அவள் கணவனும், அங்குத் தவறாது வந்து, புனல் விளையாட்டில் என்னோடு பங்கு கொண்டு விடுவனோ என அவன் அஞ்சுவளாயின், கொடிய போர் நிகழும்போதும், போர் அறம் பிறழாது போரிட்டுப்