பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450

தமிழர் வரலாறு

கைவண் கிள்ளி, வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,
விழவிற் செவீஇயல் வேண்டும், மன்னோ!
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே.

- நற்றிணை 690 : 1.8

பரத்தை, ஆடவர் தேடும் வெறியோடு தெருக்களில் வரும்போது, மனைவியர், தத்தம் கணவரை விழிப்போடு காத்துக்கொள்ள வேண்டும். தலைவியை, அவள் தோழி இவ்வாறு எச்சரிக்கிறாள். கள்ளமிலா நோக்கமைந்த அழகிய கண்கள், மயிர்ச்சாந்தணிந்து மணம் ஊட்டப்பெற்ற கூந்தல், பருத்த தோள்கள், ஒழுங்குற வளர்ந்த வெண்பற்கள், ! திரண்டு நெருங்கிய துடைகள் ஆகிய இத்தகு சிறப்புகளால் ஒப்புயர்வற்ற பேரழகியாகிய பரத்தை, அழகிய தழையாடை உடுத்து, விழாநிகழ் களம் பொலிவுபெற வந்து நின்று விட்டாள். அவள் பார்வையினின்றும் நம் கணவரைக் காக்சு, தோழிமீர் எழுமினோ எழுமின்!”

"மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்றுச், சேர்ந்துசெறி குறங்கின்
பிணையல் அத்தழைத் தை இத் துணை இலள்.
விழவுக்களம் பொலிய வந்து நின் றனளே :
எழுமினோ எழுமின் எம் கொழுநர்க் காக்கம் .

- நற்றினை : 170 : 1-5

ஆடவரை அடிமைகொள்ளும் பரத்தையரின் முயற்சி பற்றிய மற்றொரு காட்சி இதோ; ஊரில் விழாவும் முடிந்து விட்டது, முழவின் முழக்கமும் அடங்கி விட்டது; இந்நிலையில் இவள் யாது கருதினளோ என்று கேட்பாயேயாயின், கூறுகிறேன் கேள். ஒரு நாள் தழை ஆடை உடுத்து, அத்தழை