பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

451


ஆடை அசையும் அல்குலை உடையவளாய்த் தெருவின்கண் இப்பரத்தை சென்றாள். அவ்வளவே. பழைய வெற்றிகள் பல கொண்ட மலையமான் திருமடிக்கார், அவ்வோரிக்கு உரிய நகரின் ஒப்பற்ற பெரியதெருவில் வெற்றிக்களிப்போடு புகுந்தானாக, அதுகண்ட ஒரியின் மக்கள் ஒன்று திரண்டு ஆரவாரப் பேரொலி எழுப்பினாற்போல, இவ்வூரிலும் ஆரவாரப் பேரொலி எழுந்துவிட்டது. அது கேட்டதும், ஆராய்ந்து கொண்ட சிறந்த வளையல்களை அணிந்த அழகிய மேனியை உடைய இவ்வூர் மகளிரெல்லாம், தங்கள் கணவன் மார்களை, அவள் கண்ணில் படாவாறு காத்துக்கொண்டனர். அதனால் இவர்களும் நன்மை அடைந்தார்கள். நடந்தது இதுதான்.”

'விழவும் உழந்தன்று : முழவும் துங்கின்று; எவன் குறித் தனள் கொல் என்றி யாயின், தழைஅணிந்து அலமரும் அல்குல் தெருவின் இளையோள் இறந்த அனைத்திற்குப், பழவிறல் ஓரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல் கல்லென் றன்றால் ஊரே, அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில்மா மேனி மகளிர்
விழு மாந்தனர், தம் கொழுநரைக் காத்தே"

.

-நற்றிணை: 320

அளவுக்கு மீறிய பரத்தையர் ஒழுக்கம், இல்லற வாழ்க்கையில் பெரிய பூசலுக்கு வழிவகுத்துவிட்டது. ஊடல் எனப்படும், கணவன் மனைவியர்களுக்கிடையேயான சிறு பூசல், மருதத்திணை சார்ந்த பாடல்களின் கருப்பொருளாகிவிட்டது. கீழ் வரும் பாட்டு அது குறித்தது. "வெள்ளிய நெற்கதிரை அறுவடை செய்யும் உழவர் முழக்கும் தண்ணுமை ஒலிக்கு அஞ்சி, அவ்வயலில் அடங்கியிருந்த பறவைகள்