பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

457

யாழ் இசைக்கும் பாணரும், கூத்து ஆடும் கூத்தரும் கூத்தியரும், நடனமாடும் விறலியரும் ஒன்றுகலந்தே வாழ்வர். ஒருவருக்கு ஒருவர் துணைபுரிந்து கொள்வர்: அவர்கள், பெரும்பாலும் பேரரசர்காலும், குறு நிலத் தலைவர்களாலும் பேணப்படுவர். அவர்களில் ஒரு குழுவினர், ஒரு முறை பெரிய வில்லாளனாகிய ஒரு குறுநிலத் தலைவனைச் சென்று கண்டனர். அவர்களுள் தலைவன், பாணன். ஆகவே, அவன் ஏனையோரை நோக்கி, நான் பாடுகிறேன், விறவி, நீங்களெல்லாம் முழவினை முழக்குங்கள், யாழ்களில் பண்ணிசை எழுப்புங்கள்; களிற்றின் தொங்கும். கைபோலும் துளம்பு எனப்படும் பெருவங்கியத்தை இசையுங்கள் ; எல்லரி எனப்படும் சல்லியை வாசியுங்கள். ஆகுளி எனப்படும் சிறுபறையை அறையுங்கள் ; பதலை எனப்படும் ஒருகண் மாக்கிணையின் ஒரு பக்கத்தை மெல்லக் கொட்டுங்கள் ; நமது தொழில் உணர்த்தும் அடையாளக் கோலாம் மதலை மாக்கோலை என் கைத் தாருங்கள்”.

“பாடுவல் ; விறலி! ஒர் வண்ணம், நீரும்
மண்முழா அமைமின் : பண்யாழ் நிறுமின் ;
கண்விடு துாம்பின் களிற்றுயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்: ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பைஎன இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்”.
-புறம் 152 : 13-18


பாட்டுடைத் தலைவன், அவர்களுக்கு இறைச்சி கலந்த உணவும், இனிய மதுவும், பொன்னும் நிறையத் தருவன் என்பது கூறத் தேவை இல்லை. பாணன் கூற்றில் கூறுவதானால், வேட்டையில் தான் எய்து கொன்ற மானின் நிணத்தோடு கூடிய இறைச்சியாம் பக்குவமாகப் பண்ணப்பட்ட உணவோடு, உருக்கிய ஆன் நெய்போலும் மதுவையும் தந்து. தன் மலையில் கிடைத்த கலப்பில்லாத பொன்னொடு, பல்வகை மணிக்குவியல்களையும், வாங்கிக் கொள்ளுங்கள்.