பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460

தமிழர் வரலாறு

குவியல்களையும், புது வருவாய்களையும் உடைய ஊர்களை உடைய செல்வவளம் மிக்க சோழவேந்தர்களால் புரக்கப்படும் உலகமெல்லாம் பாராட்டும் நன்மை மிக்க நல்ல புகழ் உடையதான நான்மறைகளாம் பழம் நூல்களை அளித்த முக்கண் செல்வன் கோயில் கொண்டிருக்கும் ஆலமுற்றம் என்னும் இடத்தில் அழகுற எடுக்கப்பட்ட பொய்கைகளைச் : சூழ்ந்திருக்கும் பூஞ்சோலைகளில், மனையுறை மகளிர், அழகுறச் செய்யப்பட்ட மணற் பாவைகளை வைத்து விளையாடும் துறையினை உடையதும், மகரக் கொடிகளை உச்சியில் கொண்ட வானளாவ உயர்ந்த மதிலையும், முடி அறியப்படாவாறு மிக உயர்ந்த மாளிகைகளையும் உடைய புகார்' என்றும், "பூக்கள் மலர்ந்து மணக்கும் நீண்ட உப்பங்கழிகளின், நடுவண், பெரும் புகழ் வாய்ந்த காவிரியின் கரைக்கண் உள்ள நகரம் என்றும் கூறப்பட்டுளது.

பூவிரி அகல்துறைக் கனைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர்கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர்,
ஞாலம் நாறும் நலங்கெழு நல்இசை
நான்மறை முது நூல் முக்கண் செல்வன்
ஆல முற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவை துறை......
மகர நெற்றி வான்தோய் புரிசைச்,
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல்இல்

புகாஅர்"
-அகம் : 181 : 1.1-82
"பூவிரி நெடுங்கழி நாப்பண் ; பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினம்.
-அகம் : 205 : 11-11