பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

473

ரோமின் கடல் வாணிகத்தில் மிளகு, வணிகப் பண்டமாக அமைந்தது. முக்கியமாக, மலபாரிலிருந்தும், திருவாங்கூரிலிருந்தும் மிளகு சென்றது. ரோமர்கள் விரும்புவது எனும் பொருளிலான “யவனப் பிரியா” என்றபெயர், மிளகிற்கு இடம் படுமளவிற்கு, இந்த நூற்றாண்டில், மிளகு, உரோமர்களால் ஆர்வத்தோடு தேடப்பட்டது. (யவனர் என்ற சொல், இக்காலை, தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும், ரோமரையும் குறிக்கும் வகையில் விரிவடைந்துவிட்டது) கருப்பு மிளகை விட, காரம் குறைவாகவும், சுவை மிகுதியாகவும் தருவது கருதி, வெள்ளைமிளகுக்குத் தணிவிலை தரப்பட்டது: அக்காலைய சமயற்கலை நூல்களில், உப்பு, சர்க்கரைகளை விட, மிளகே முக்கியப் பொருளாகக் கூறப்பட்டது. ஆகவே, மேற்கே நோக்கிச் செல்லும் பல கப்பல்களில், பாதிப்பண்டம் மிளகாய் அமைந்தது எனக் கூறப்பட்டது (Warmingron: Page : 182), இந்தியாவிலிருந்து இஞ்சியும் இறக்குமதி செய்யப் பட்டது. ஆனால், அது உணவுக்காகப் பயன்பட்டதைக் காட்டிலும் மருந்தாகப் பயன் பட்டதே அதிகம்.

ஏலம், மருந்து, மணப்பொருள் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தப்பட்டது. லவங்கமும் அவ்வாறே. “மலபத்திரம்” என அழைக்கப்படும் லவங்க இலையை, இந்தியப்பண்டம் என அறிந்திருந்த ரோமானியர், அதன் வேரும், அதன் பட்டையும், அந்த மரமும் ஆப்பிரிக்காவில் விளைவனவாக எண்ணியது விந்தைக் குரியது. அதன் பிறப்பின் உண்மையை, அராபிய வணிகர்கள், ரோமானியரிடம், அத்துணைத் திறமையாக மறைத்து வைத்திருந்தனர். இலாமிச்சை எண்ணெய், உயர்ந்த விலை தரப்பட்ட மற்றொரு பண்டம் இஞ்சிவேர், எலுமிச்சை வேர் ஆகியன கொண்டு இறக்கிய எண்ணெய்களும், இலாமிச்சை எண்ணெய் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டன. ரோமப் பேரரசின் வீட்சிப் பருவத்தில், சாதிக்காய், கிராம்புகளும் இறக்குமதி செய்யப்பட்டன: எள்ளெண்ணெய், ஸ்ட்ராபோ (Strabo) அவர்களால், தேனீக்களின் துணை இல்லாமலே, இந்திய மரங்களிலிருந்து பெற்ற