பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

தமிழர் வரலாறு

நகரை விடுத்து, தலைநகரை, நிகோமீடியா (Nicomedia) வுக்கும், சிறிது நாளைக்கெல்லாம் பைஸான்டிம்” (Byzan-tium) நகருக்கும் மாற்றுவதற்கு வழிவகுத்துவிட்டது. (Scoff's Periplws : page: 219 - 220).

தென்னிந்திய துறைமுகங்கள் பற்றிப் பெரிப்ளுஸ் :

“இந்தியப் பெருங்கடலுக்கு வழிகாட்டு நூல்” (Periplws of the Eythrean sea) நூலின் ஆசிரியர், அதை எழுதிய கி. பி. 60ல், வட இந்தியத் துறைமுகங்களே அல்லாமல், தமிழ் நாட்டுத் துறை முகங்களையும் விளக்கியுள்ளார். மற்ற துறைமுகங்களோடு, தொண்டி, முசிறித் துறைமுகங்களையும் ஒரு காலத்தில் ஒரு பெண் தெய்வம், ஆங்கு வாழ்ந்து நீராடியதாகக் கூறப்படுதலின், தங்களுடைய எஞ்சிய வாழ் நாட்களில், அறப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பி, நீராடித் துறவு வாழ்க்கை வாழ்வதற்காக ஆடவர்களும், அது செய்ய விரும்பிய மகளிர்களும் வந்து வாழும் கொமரித் (ஆங்கிலத்தில் கேப்காமொரின் {Cape conorin) தமிழில் குமரித் துறையையும் குறிப்பிட்டுள்ளார் (Periplus: Page : 58). பல்வேறு ஆகம வழிபாட்டு நெறிகளும், துறவு வாழ்க்கை முறைகளும் தோன்றியதிலிருந்து பிக்க்ஷூக்களும், பிக்க்ஷூஷனிக்களும், உலகத் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான் வேண்டித், தென்னிந்தியக் காடுகளில், எளிதில் புகமாட்டா ஒரு கோடியில் தவம் மேற்கொண்டனர் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. இன்று நிகழ்வது போலவே, கி. பி. முதல் நூற்றாண்டிலும், சாதுக்களும், சந்நியாசிகளும், குமரி முனைக்குக் கடலில் நீராடச் சென்றனர். ஒரு கன்னிப்பெண், தன்னைச் சிவன் மணந்து கொள்வதை எதிர்பார்த்து, அவளுடைய தெய்வத்திருமேனி, இன்றும் அமைதியாக நிற்கும், குமரி முனையில் காத்திருந்தாள் என்ற பழங்கதை, அத்துணைப் பழங்காலத்தில் கூறப்பட்டு வந்துளது என்பதைப் பெரிபுளுஸிலிருந்து அறிகிறோம். இப் பழங்கதை, மகாபாரதக் காலத்திலிருந்தே இருந்துவருகிறது என்றாலும், தமிழர்களில் பெரும்பகுதியினர். கி. பி. முதல்