பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

485

போலும் தலையுடையதான ஆண்டலைப் புள் வடிவில் இருந்து வருவார் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி, 11) கிடங்கில் ஏறின் மறித்துத் தள்ளும் இருப்புக் கவை, 12) கழுக்கோல் 13) அம்புக்கட்டு 14) அம்புகளை எய்யும் ஏவறைகள், 15) ஐயவித்துலாம், 16) மதிலைப் பற்றுவார் கைகளைக் குத்திப் பொதுக்கும் ஊசிகள், 17) கிச்சிலிப் பறவைபோல், பாய்ந்து சென்று பகைவர் கண்களைக் கொத்தி மீளும் பொறி, 18) மதில் மீது ஏறினார் உடலைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் நிற்கும் பொறி, 19) மூங்கில் வடிவில் நின்று அடித்து நொறுக்கும் பொறி 20) கதவுக்கு அரணாக, உள்வாயிற் வடியில் நிலத்தில் நால விடப்படும் மரங்களாம் எழு, சீப்பு, 21) கதவுக்குக் குறுக்கே பாய்ச்சப்படும் கணைய மரம், 22) ஏவுகணைகள், 23) குந்தம், 24)வேல்,

“வளைவிற் பொறியும்,
கருவிரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந்நெயும், பாகடு குழிசியும்,
 காய்பொன் உலையும், கல் இடு கூடையும்,
துாண்டிலும், தொடக்கும், ஆண்தலைப் புள்ளும்,
கவையும், கழுவும், புதையும் புழையும்,
ஐயவித் துலாமும், கைபெயர் ஊசியும்,
சென்றெறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும் சீப்பும், முழுவிறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்”.
- சிலப்பதிகாரம் : 5 : 207.2.17


சீவக சிந்தாமணி, சில நூறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட நூலாயினும், அவற்றின் சில பாக்கள் சங்கு எடுத்துக் காட்டும் தகுதியுடையவாம். அதில் கூறப்பட்டிருக்கும் படைப் பொறிகளாவன : நூற்றுவரைக் கொல்லி ; பகை வீரர்களைத் தூக்கி எறியும் பொறி, காணத் தெரியும் பேய்ப்