பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486

தமிழர் வரலாறு

பொறி, யானைப்பொறி, பாம்புப்பொறி, கூற்றுநிகர் கழுகுப் பொறி, சங்கிலிப் பொறி, குந்தம், புலிப்பொறி, விற்பொறிகள், கொடிய குதிரைப்பொறி, பகைவரைத் தொடர்ந்து சென்று வெட்டும் வாள், கல் உமிழ் கவண்கள், பாவை உருவிலான பொறிகள், செந்திப்பொறிகள், செந்தழல் கொப்புளிக்க, கொல்லன் காய்ச்சிய இருப்புக் குண்டுகள், கொக்குப் பொறி, கூகைப் பொறி, தலை நெருக்குத் துாலம், உருக்கிய செப்பு, உருக்கிய இரும்பு, கொதிக்கும் எண்ணெய் இவைகளை வாரி இறைக்கும் பொறிகள், அம்பு, வேல், கற்களைத் தாமே ஏவும் பொறிகள், பன்றிப் பொறி, பாம்புப் பொறி, தானே இயங்கும் தேர்ப் படை, குரங்குப் பொறி, ஆட்டுப்பொறி, கழுத்தறுக்கும் கயறு ஆகிய இவை, யவனர்களின் பொறியியல் அறிவு துணை கொண்டு பண்ணப்பட்டன என்கின்றன அப்பாக்கள்:

“மற்றவர் மறப்படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு, தூக்கு எறி பொறியும்,
தோற்றமுறு பேய், களிறு, துற்று பெரும் பாம்பும்
கூற்றமன கழுகு, தொடர் குந்த மொடு கோண்மா”,


“விற்பொறிகள், செய்ய விடுகுதிரை, தொடர் அயில்வாள்,
கற்பொறிகள், பாவையன, மாடம் அடு செந்தீக்
கொற்புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில்

செய்கூகை

நற்றலைகள் திருக்கும் வலிநெருக்கு மர நிலயே”.


“செம்புருகு வெங்களிகள் உமிழ்வ, திரிந்த எங்கும்
வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய் முகந்து உமிழ்வ,
வம்புமிழ்வ, வேல் உமிழ்வ, கல் உமிழ்வ வாகித்
தம்புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே” .


“கரும்பொன் இயல் பன்றி, கதநாகம், விடுசகடம்,
குரங்கு, பொருதகரினொடு, கூர்ந்து அரிவ நுண் நூல்,