பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

489

அரச இணங்களில், எந்த ஓர் அரச இனமும், ஏனைய அரச இனங்கள் மீது பேரரசு உரிமை கொள்ளும் காலம் இன்னமும் உருவாகவில்லை என்பதைத், தன்னளவிலேயே உணர்த்துவதாகும். மேலும் வடஇந்தியா பற்றி ஆராயும்போது: பரவலாக , “இந்தோ - சித்தியா” (Indo - scythia} “அபிரியா” (Ahiria) “அர்சா” (Arsa) என்பன போலும் அரசுகள் பற்றியே பேசும் தாலமி, தென்னிந்தியா பற்றிய செய்திகளில், “ஜஒயி” (Aioi) “கரெஒயி” (Kareoi) “பண்டியோனொயி” (Pandionoi) “சொரெடொயி” (Soretoi); “பட்டோயி” (Batoi) “அருவர்னொயி” (Arwvarnoi) “தொரிங்கோயி” (Thoringci) என்பன போல் பழங்குடியினர் பற்றியே பேசுகிறார். இது, கரிகாலன் மற்றும் நெடுஞ்செழியன் காலங்களைப் போல, அரசர்களின் ஆட்சித் திறன் உறுதி செய்யப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. வடக்கிவிருந்து வரிசைப்படுத்துங்கால் இடம்பெறும் முதல் தமிழ்நாட்டின் பெயரை, “லிமிரிக்கே” (Limyrice) அல்லது “டிமிரிக்கே” (Dymirike) என, அவர் அழைக்கிறார்: இப்பெயர், தமிழகம் முழுமையும் குறிப்பதாகத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், பெரிபுளுஸ், தாலமி, ஆகிய இரு ஆசிரியர்களுமே, சேர நாட்டை மட்டும் குறிக்கும் பெயராகவே, அதைக் கொண்டுள்ளனர். அதற்கு வடக்கே உள்ள நாடு, அவர்கள் கருத்துப்படி, பழந்தமிழ் இலக்கியங்களின் பல்வேறு இடங்களிலும், மராத்தியர் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் நிலையில் வரும் ஆரியர்க்கு உரித்தான “அரியகே” (Ariake) என்ற நாடு ஆகும். தமிழர்களுக்கு உரியதான டிமிரிகே (Dymirike) என்ற பெயர், ஆரிய நாட்டை அடுத் திருக்கும் தமிழ் மாநிலத்தை, அதாவது சேர நாட்டைக் குறிப்பதாக, வெளி நாட்டு வணிகர்களால், மேலலெழுந்தவாரியாக, எடுத்துக் கொள்ளப்பட்டது. தாலமி குறிப்பிடும் இனங்களில் பெரும்பாலான்வை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியனவே, ஐயோயி' (Aioi) எனப்படுவார், ஆயர் ஆவர். “காரஒஇ” (Kareoi) எனப்படுவார், கரையர் ஆவர்: “பண்டியோநோயி” (Pandinoui) எனப்