பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு... வாணிகம்

491

புரத்திற்கு அருகில் உள்ள மாநிலங்கையைக் குறிக்கும். “மலங்கா” (Malanga), கடலைச் சார்ந்தனவும் உள்நாடுகளில் இருப்பனவுமாகிய எண்ணற்ற ஊர்ப் பெயர்களையும் தாலமி குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு : “திண்டிஸ்” (Tyndis) தொண்டி ஆகும்.“மெளவிரிஸ்” (Mowziris). முசிறி ஆகும். மரகதமும், வைடூரியமும் கிடைக்கும் “பெளனட” (lownta) புன்னாடாகும். சேர நாடாம் “டிமிரிக்கே”வில் இருக்கும் “கரெளரா” (Karoura), கரூர் ஆகும். ஐயோயி நாட்டில் இருக்கும் கொட்டியரா, கொமரியா (Kotiara , komatia) என்பன முறையே, கோட்டாரும், குமரியும் ஆம், “கோரி” (Kory) தனுஷ்கோடி, இராமேஸ்வரம் இரண்டையும் குறிக்கும். மதுரை மட்டு மல்லாமல், பாண்டி நாட்டில் இருக்கும் பெரிங்கரை (Beringkarai) பெருங்கரையைக் குறிக்கும். “நிகம” (Nikama). நாகைப்பட்டினம் அல்லது நியமத்தைக் குறிக்கும். “படொயி” (Batoi) நாட்டில் உள்ள கல்லிகிகொன் (Kalligikon). “கலிமிர் முனை” அல்லது தலைமன்னார் முனையைக் குறிக்கும் “கபெரிஸ்” (Khaweris) காவிரிப்பூம்பட்டினத்தையும் “மகெளர்” (Magour) மோகூரையும் குறிக்கும். “தொரிங்கோயி” அல்லது “சொரெடோயி” நாட்டில் உள்ள ,“ஓர்தெளரா” குறிப்பது மட்டுமல்லாமல் “அருவர்னோயி” நாட்டில் உள்ள காஞ்சீபுர நாட்டின் கடல் துறையாம், மல்லை, இன்றைய மகாபலிபுரம், அல்லது காஞ்சியைக் குறிக்கும் மாவிலங்கையாம், “மலங்கா” (Malanga)வையும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளின் பெயர்களையும். தாலமி, குறிப்பிட்டுள்ளார். அவரால் “திமிரிகெ” என அழைக்கப்படும் சேர நாட்டில், இன்று போலவே அன்றும் தலையாய ஆறாக இருந்த, முதல் ஆற்றின் பெயர், “பொய்வாய்” எனும் பொருள்படுவதாய “ஸெவுதோஸ்தோமோஸ்” (Psewdostomos) என்பதாம். பேரியாறு, கடலொடு நேரே கலப்பதில்லை . அது, கிராங்கனூருக்கு அருகில், கழிநீரோடு கலந்து, தன் போக்கை இழந்துவிடுகிறது என்ற