பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

தமிழர் வரலாறு

ஆடம்பரப் பொருள்களின் தேவை பெருகிவிட்டது. அதன் பயனாய்ப், பேரரசர்களின் நாணயங்கள், இந்தியாவில் காணப்படலாயின. ஏழாம் நூற்றாண்டில், அராபியர், சிரியா, எகிப்து, பர்ஷியா ஆகிய நாடுகளை வெற்றிகொண்டு, மீண்டும், இந்திய வாணிகத்தின் இடைத்தரகராயினர். ஆகவே, யவனர் என்ற பெயர், மெல்ல மெல்ல, அராபியரை குறிக்கவும் வழங்கப்பட்டு, பின்னர், பொதுவாக, முகம்மதியரைக் குறிக்கவும் வழங்கப்பட்டுவிட்டது.