பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யிருக்க வேண்டும்; அப்படியில்லையென்றால், அவர்களிடையே, அறங்கூறும் ஆன்றோர்களின் பிறப்பை விளக்குவது மிகவும் அரிதாம் காரணம், அறம்கூறும் ஆன்றோர்கள், அரசர்களின் அரவணைப்பு இன்றித் தோன்றுதல் இயலாது. அசோகன், ஆந்திரர் மீது, தெளிவில்லாத ஒரு வகை மேலாதிக்கத்தைக் குறிப்பாக உணர்த்துகிறான். இது, கி. மு. நான்கு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆந்திர அரசர்கள், மகாபத்ம நந்தனி விருத்து வரும், மகதப் பேரரசர்கள், வல்லமையில் தங்களிலும் சிறந்தவர் ; மரியாதைக்காகத் தங்களிடமிருந்து நன்கொடை பெற உரிமையுடையவர் என்பதை ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் பொருள் படுமேயல்லாது, அந்திரப் பகுதி, மகதப் பேரரசின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது என்பது பொருளாகாது. மேலும், பெரும்பாலும் மெகஸ்தனிஸின் கூற்றுக்களிலிருந்து மேற்கோள் காட்டி, ஆந்திர நாடு, எண்ணற்ற சிற்றுார்கள் அல்லாமல், மதில் சூழ்ந்த நகரங்கள் முப்பதையும் 1,00,000 வீரர்கள், 2000 குதிரைகள், 1000 யானைகள் கொண்ட ஒரு பெரிய படையையும் கொண்டிருந்ததாகத், திரு. பிளைனி அவர்கள் தமக்கு அறிவிப்பதை, வி. ஏ. சிமித் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இச்செய்திகள், உண்மையில், மெகஸ்தனிஸிடமிருந்தே வந்தனவாயின், அது, மெளரியர் காலத்தில், ஆந்திர அரசர்கள், பரந்த, ஆற்றல் மிக்க தன்னாட்சிப் பகுதியைப் பெற்றிருந்தனர் என்பதைக் காட்டுவதாகும்: அசோகன் காலத்தில், ஆந்திரர்கள், தங்கள் அரசர்களின் ஆட்சியின் கீழ்ப், பெரிதும் மதிக்கத் தக்க தன்னாட்சி உரிமையை அனுபவித்திருந்தனர் என்றும் திரு சிமித் அவர்கள் கருதுகிறார்.[V. A. Smith. Early History of India, Page 217-18 and Foot note].

புராணங்கள், தங்கள் ஆந்திர அரசர்களின் பட்டியலை, கிமுகனைக் கொண்டு தொடங்குகின்றன. இன்றைய வரலாற்று அறிஞர்கள், அவன், கி. மு: மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி புரிந்திருந்ததாக எண்ணு