பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிபுர மாவட்டம்

505

சாக பல்லவர்களின் ஒரு பிரிவினர், பாரத்வாஜ கோத்திரத்து கடித்திரியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத், தங்களைப் பல்லவர் என அழைத்துக்கொண்டனர்.

(பகலவ என்ற சொல், காந்தாரம் முதல் காஞ்சீபுரம் வரை வழக்கில் இருந்த, பிராகிருத மொழி வடிவமாம் பல்லவ, என்ற சொல்வின் சமஸ்கிருத வடிவமாகும் ; அது, அருகியே வழங்கப்படும் என்ற உண்மையை அறியாத நிலையில், காஞ்சிப் பல்லவர்களை, ஏனைய இந்திய மாநிலங்கள் அனைத்திலும் உள்ள பல்லவரின் வேறுபட்டவராகக் கொண்டு, அவர்களுக்கு, ஒரு தமிழர் மூலத்தைக் காணும் பயனில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது: ஐரோப்பிய மொழிகளில், “பார்த்தியன்” என ஆகும், ஒரு பழங்குடி இனத்தவர் பெயராம், “பார்த்தவ” என்பதன், இந்தியத் தன்மையதா ஆக்கப்பட்ட பகலவ, பல்லவ இரண்டும் ஒரே சொல் ஆகும்.)

காஞ்சியின் பழைய பல்லவ அரச இனம்:

காஞ்சியில், தன்னை நிலைபெறச் செய்துகொண்ட முதன் பல்லவன், பெரும்பாலும், பப்பா. அவன், ஆத்ரேய, ஹாரித, பாரத்வாஜ, கெளஸிக, காஸ்யப, மற்றும் வத்லகோத்திரப் பார்ப்பனர்களுக்கு, நூறாயிரம் காளைக் கலப்பைகளை, ஆயிரமாயிரம் பொற்காசுகளை நன்கொடையாக அளித்தான் எனக் கூறப்படுகிறான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருள் ஒருவனும், தன் முன்னோன் பப்பாவின் அறப்பணிகளைக் குறிப்பிடுபவனுமாகிய சிவகந்தவம்மன், “அக்னிஷ்டோமம், வாஜபெய, அஸ்வமேத யாகங்களைச் செய்தான், இவ்வுண்மைகள், பண்டை நாட்களில், காஞ்சீமாநகரத்தில், பார்ப்பனர்களுக்குப் (தென்னிந்திய ஆரியர்) பஞ்சம் இல்லை. ஆகவே, அந்நகரம், பல்லவ ஆட்சி தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, ஆரிய மயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன, சிவகந்தவம்மனுடைய செப்பேடுகள், அவனுடைய மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம், அர்த்த சாஸ்திரத்தில் விளக்கியுள்ளவாறும், சாணக்கியனை