பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

515

கிழான் (அகம்: 356) என்ற இவர்களையும் பாராட்டியுள்ளார்.

கரிகாலனைப் பாடிய மாமூலனார், அவனுடைய வெண்ணிப்போர் வெற்றியையும், அப்போரில் புறப்புண் பெற்றுத் தோல்வியுற்ற சேரலாதன் அதற்காக வெட்கி வடக்கிருந்து உயிர் இழந்துபோக, அதுபொழுது, அவனே போல் வடக்கிருந்து உயிர் இழந்த சான்றோர் செயலையும் பாராட்டியுள்ளார். (அகம் : 55) கரிகாலன் வெண்ணிப்போர் நிகழ்ச்சியைக் கூறும் அவரே, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாராட்டியுள்ளார். (அகம் : 127, 347) அது மட்டுமல்லாமல், அதியமான் (அகம் : 115), அதியன் (அகம் : 325) ஆவி (அகம் : 1, 16) எருமை (அகம் : 115) எவ்வி (அகம் : 67) எழினி (அகம் : 211) திதியன் (அகம் : 331) நன்னன் (அகம் : 67) புல்லி (அகம் 61, 295, 311, 353, 393 : நற் : 14) இவர்களையும் அறிந்து தம் பாட்டிடை வைத்துப் பாராட்டியுள்ளார்.

கரிகாலன் அவைக் களப் புலவராய் இருந்து, பொருநராற்றுப்படை பாடி அவன் புகழ் பரவும் முடத்தாமக் கண்ணியார், பனந்தோடும் வேப்பந்தாரும் அணிந்த இரு பெருவேந்தர்களும் ஒரு களத்தே அழிந்த வெண்ணிப்போர் நிகழ்ச்சியை விளக்கும் அதே பாட்டில் (146) கரிகாலன் பிறந்த சோழர்குலமும், அவனால் வெற்றி கொள்ளப்பட்ட சேர, பாண்டியர் குலமும் பகை ஒழிந்து நட்புப் பூண்டு ஒன்றுபட்டு, ஒருங்கே வீற்றிருக்கும் காட்சி நலத்தை அகக்கண்ணால் கண்டு களிப்புறவும் செய்துள்ளார் (53 - 56).

வெண்ணிப்போர் நிகழ்ச்சியை, அப்போர் நிகழ்ந்த வெண்ணி வாயிலில் வாழ்ந்திருந்தமையால், நேரில் கானும் வாய்ப்பினைப் பெற்ற வெண்ணிக்குயத்தியார், அப்போரில் கரிகாலன் பெற்ற வெற்றியைப் பாராட்டிய அதே வாயால், அவனோடு போரிட்ட பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் துறக்கக் காரணமாய், அவன் முதுகில்