பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

தமிழர் வரலாறு

வேலெறிந்த, அவன் செயலைப் பழிப்பதும் செய்துள்ளார் (புறம் : 66).

வெண்ணிப்போர் நிகழ்ச்சியைப் பாடிய (புறம் : 65) கழாத்தலையார், அக்கரிகாலன் குலத்து வந்த வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும், குடக்கோ நெடுஞ்சேரலாதனும், போரிட்டு ஒரே களத்தில், ஒருசேர மாண்ட காட்சியைப் பரணர் போலவே, தம் பாக்களிடையே (புறம் : 62, 368) வைத்துக் கலங்குவதும் செய்துள்ளார்.

மூவேந்தருள், தான் பிறந்த சோழன் குலம் தவிர்த்த, சேர, பாண்டியர் குலத்து இரு வேந்தர்களையும், அம்மூவேந்தர் ஆட்சி நிலவும் தமிழகத்திலேயே இடை இடையே சிறுசிறுநாடுகளை ஆண்டுகொண்டிருந்த பதினொரு வேளிர்களையும், ஒருங்கே வெற்றிகொண்டு அழித்துவிட்டான் கரிகாலன் என்றால், அங்கெல்லாம், நடைமுறையில் இருந்த அரசுகளை அகற்றிவிட்டுத், தன் சோழ அரசினை நிலை நாட்டிவிட்டான் எனக்கொண்டுவிடல் கூடாது. அது நடந்திருந்தால், வாகைப் பறந்தலையில் பிறிதொரு போரைச் சந்திக்கவேண்டிய நிலையோ, ஆங்கு ஒன்பது மன்னர்களை வெற்றிகொண்டு அவர்தம் ஒன்பது குடைகளையும் கைப்பற்ற வேண்டிய நிலையோ, கரிகாலனுக்கு வாய்த்திராது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின், தலையாலங்கானப் போர் வெற்றியைப் பாராட்டிய ஆருலவிய நாட்டு பேரி சாத்தனார், இடைக்குன்றுார் கிழார், கல்லாடனார், குடபுலவியனார், பொதும்பில் கிழார் மகனார், நக்கீரர், மாங்குடிமருதன் ஆகிய புலவர்கள் எழுவரில், இடைக் குன்றுார் கிழார் (புறம் : 76) குடபுல வியனார் (புறம் : 18, 19) பொதும்பில் கிழார் மகனார் (நற் : 387) ஆகிய மூவரும் வேறு வேந்தர்களையோ, குறுநில தலைவர்களையோ பாடினாரல்லர்.

ஆருலவியநாட்டு ஆலம் பேரி சாத்தனார், அவன் தலையாலங்கானப் போர் வெற்றியைப் பாடியதோடு (அகம் :