பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

523

வழங்குவதற்காகவே கவிழும் தொடி அணிந்த கையும், வெற்றிதரு வாட்படையும் உடைய சோழர்க்கு உரிய காவிரி, ஆற்றையும், "கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கை வலம்படு வென்றி வாய்வாள் சோழர், இலங்குநீர்க் காவிரி" (20-22) கூறியிருப்பதன் மூலம், தொண்டையர் வழிவந்த, திரையன் காலத்தே, அவ்வேங்கட நாடு, அதியமான நெடுமான் அஞ்சியின் தகடூர், வேள்பாரியின் பறம்புபோலும் நாடுகளைப். போல, மூவேந்தர் ஆட்சிக்கு உட்படாத் தனியரசு நடத்திய தமிழ் நாடாகத் திகழ்ந்தது என்பதை உணர்த்தியுள்ளார்.

அது மட்டுமன்று, சோழர்க்குரிய காவிரிக்கு வடக்கே, பெண்ணையாற்றங்கரைத் திருக்கோவலுரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆண்டுவந்ததைப் போலவும், பாலாற்றங்கரைக் கச்சியைத் தலைநகராகக் கொண்டு திரையன் ஆண்டுவந்ததைப் போலவும், சேயாற்றங். கரைச் செங்கண் மாவைத் தலைநகராகக் கொண்ட மலை நாட்டை நன்னன் சேய் நன்னன் என்பான் ஒரு தமிழ்க் குறுநில மன்னனும், அப்பழந்தமிழர் காலத்தே ஆண்டு வந்தான். அவன் புகழ் பாடும், பாண்டி நாட்டுப் புலவராம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார், தம்முடைய மலைபடு கடாம் என்ற பாட்டில், அவன் பெயர். "நன்னன் சேய் நன்னன்" என்பதையும் (64), அவன் தலைநகர், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாய், இன்று ஜவ்வாது மலை என அழைக்கப்படும் நவிரம் "பேரிசை நவிரம்" (82) என்பதையும், அவன் நாட்டில் பெருக்கெடுத் தோடும் ஆறு, திரையன் நாட்டுப் பாலாற்றோடு கலந்து ஒடிக் கடலில் விழும் இக்காலை செய்யாறு என அழைக்கப் பெறும் சேயாறு "காணுநர் வயாஅம் கட்சின் சேயாறு" (476); "கடுவரல் கலுழிக் கட்கின் சேயாறு" (555}. என்பதையும் அறிவித்துள்ளார். நன்னன் சேய் நன்னன் நாட்டுப் பரப்பின் பெருமையும், வளச் செழுமையும், மக்கள் பண்பாடும், புலவர்க்கு 583 வரிகளைக் கொண்ட ஒரு நெடும். பாட்டைப் பாடத் தேவைப்படுமளவு படர்ந்து, நீண்டு. உயர்ந்து, சிறந்து விளங்கின.