பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

தமிழர் வரலாறு

பெறவில்லை. “காஞ்சீஊர” “காஞ்சி ஊரன்” என்ற தொடர்கள் (அகம் : 96:குறுந்:10, 127) இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை, “காஞ்சி” என்னும் ஊர்ப்பெயர் உணர்த்துவனவல்ல. காஞ்சி மரங்கள் நிறைந்த ஊருக்கு உரியவன் எனும் பொருள் தந்து காஞ்சி என்ற மரத்தின் பெயரை உணர்த்துவனவே. அதுபோலவே, மகளிர், “காஞ்சி நீழல் குரவை அயரும்” (அகம் 336), “நீர்த்தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக்கதூஉம் இளவாழை” புறம் , 18) “நாரை, தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும்” (புறம் 351) என வேறுபல இடங்களிலும், “காஞ்சி” எனும் சொல் இடம் பெற்றிருந்தாலும், அங்கெல்லாம், அது, காஞ்சிமரம் எனும் பொருளில் வந்துள்ளதேயல்லது காஞ்சிநகர் எனும் பொருளில் வரவில்லை, என்ற வாதத்தையும் வைத்துள்ளார் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள். (பக்கம் : 323)

திருவாளர் அய்யங்கார் அவர்கள் மேலே எடுத்துக் காட்டிய தொடர்களில் இடம்பெறும் “காஞ்சி” எனும் சொல், மரத்தின் பெயரையே குறிக்கிறது என்பது உண்மை. ஆனால் “காஞ்சி” எனும் சொல், ஊர்ப் பெயரைக் குறிக்கும் வகையில் ஆளப்படுவதும் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம் பெற்றுளது. கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பரணர், தம்முடைய பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றில், அவனை வாழ்த்துங்கால், “நின் பெயர் வாழியரோ... காஞ்சியம் பெருந்துறை மணவிலும் பலவே” (பதிற்று : 48) என வாழ்த்தியுள்ளதும், அக்காஞ்சியாறு, கோவை மாவட்டம் பேரூர்க்கு அருகில் ஒடும் ஆறு எனும் பொருள் கொண்டு அதை உறுதி செய்ய, “மீகொங்கில் அணி காஞ்சி வாய்ப் பேரூர்ப் பெருமானை” என்ற நம்பியாரூரர் தேவாரப் பாடலை எடுத்துக் காட்டாகக் கொள்வதும் காண்க.

கொங்கு நாட்டில் ஒடும் ஒர் ஆறு, காஞ்சி எனும் பெயர் பெற்றுளது. அது ஒடும் இடம், தமிழகத்து மக்கள் ஒரு சிலரால் மட்டுமே அறியத் தக்கதாக, தமிழகத்தின் ஒரு